மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவிப்புகள் இடம்பெறவில்லை!
சென்னை, மார்ச் 25 - அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவிப்புகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு பதிலளித்த பெ. சண்முகம், “தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சி களும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்குவது வழக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வழக்கத்துக்கு விரோதமாக நடை முறை சாத்தியமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு அபரிமிதமான வாக்குறுதி களை வழங்குவதை பல கட்சிகள் வழக்க மாக வைத்துள்ளன. பிறகு பலவற்றை நிறைவேற்ற முடி யாத நிலைமை ஏற்படுகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, புதிய தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவது, அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்ற வாக்குறுதிகள் இல்லை. குறிப்பாக பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முறையில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த ஒரு வாக்குறு தியும் இல்லை” என்று கூறினார்.
