tamilnadu

img

தீக்கதிர் தென்மண்டலச் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 62 பேர் கைது 
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயகுமார் கூறியதாவது, மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 8040 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை திருப்பி உரியவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக தனிப்படைகள் மூலம்கண்காணிக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில்மட்டும் 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில்கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண் டில் இதுவரை 62 பேர் இச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் தேவையின்றி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவீடுகள் வெளியிடுவது தெரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து தூத்துக்குடி குருஸ்பர்னாந்து சிலை முன்பு மாவட்டஎஸ்.பி., பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசங்களை வழங்கினார். பின்னர் மத்திய காவல் நிலையம் சார்பாக தொடர்ந்து 25-வது வாரமாக ஏழை, எளியமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

படகில் பதுக்கிய  கடல் அட்டை பறிமுதல்
தூத்துக்குடி:

தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதர்ஷ் என்ற ரோந்து கப்பல் மூலம் கடலோர காவல்படையினர் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடல்எல்லையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற ஒரு படகை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் படகில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் 1000 கிலோ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டைகள், படகையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்தப் படகுஇராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது என்பவருக்கு சொந்தமானது எனத் தெரிந்தது. படகில் இருந்த இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. 

தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் 
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கலியாவூர், மணக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாமிரபரணிஆற்றங்கரையில் அதிகளவு மணல்கள்கடத்தபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கலியாவூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் டிப்பர் லாரியில் ஜேசிபி வைத்து மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் பிடிபட்டார். 4 பேர் தப்பினர். மேலும் 5 லாரிகள், ஒரு மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரம், 3 யூனிட் மணல்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டிப்பர் லாரி டிரைவரான வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பாண்டி மகன் சிதம்பரம் (19) என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் தப்பிய 4 பேரை தேடிவருகின்றனர்.

சம்பா சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள் 
திருநெல்வேலி:

தென்மேற்கு பருவமழை கடைசி நேரத்தில் கருணை காட்டியதால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை 100 அடி கொள்ளளவை எட்டியது. விவசாயிகளுக்கு ஜூன் மாதத்தில் சம்பா சாகுபடிக்கு வழங்க  வேண்டிய தண்ணீரை இப்போது காலம் தவறி திறந்து விட்டுள்ளனர். இப்போது நடுவைவேலைகளை தொடங்கினால் அறுவடைஎன்பது வடகிழக்கு பருவ மழை காலத் தில் வரும். வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களுக்கு தான் அதிக மழையைகொடுக்கும். ஆதலால் அறுவடை மிகவும் பாதிப்படையும் என்பதால் 80% விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட்டனர். போதிய தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் வேதனையை உருவாகியுள்ளது விவசாயிகளின் மத்தியில்.

வாலிபர் கைது  
திருவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம்  திரு வில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில்கடந்த 2 ஆம் தேதி  முழு ஊரடங்கைபயன்படுத்தி கொண்ட  மர்மநபர் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து 60 ஆயிரம் மதிப்புள்ள  350  க்கும் மேற்பட்டமது பாட்டில்களை  கொள்ளையடித்து சென்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வாலிபரை கைது செய்தனர்.