tamilnadu

img

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை

சென்னை, ஜன. 10 - பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் இரண்டு புதிய மசோதாக்களை தமிழக சட்டமன்றத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கள் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக கல்வி நிறுவனங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவிகள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அண்மையில், சென்னை அண்ணா  பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழ்நாடே கொந்த ளித்தது. இந்த சம்பவத்தில் குற்ற வாளி உடனடியாக கைது செய்யப் பட்டார். எனினும், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் முதல் தகவல் அறிக்கை ஊடகங்களில் கசிந்தது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியது. பின்னர் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு, தொழில்நுட்ப குளறுபடியே காரணம் என்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய தகவல் மையம் ஒப்புக் கொண்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்  தொடர்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்சனை விவாதத்திற்கு வந்தது. 

இந்நிலையில், பெண்கள் - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜன.10) அன்று, கேள்வி நேரம் முடிந்ததும், ‘தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு குற்ற வியல் சட்டங்கள் (திருத்த) சட்டம்  மற்றும் 2025-ஆம் ஆண்டு பெண்ணு க்கு துன்பம் விளைவிக்கும் தடை (திருத்த) சட்டம்’ ஆகிய இரண்டு சட்டத் திருத்த முன்வடிவுகளை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். அந்த மசோதாக்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: பாலியல் வன்கொடுமை மற்றும் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிக்கு பிரிவு - 64 (1) -இன் படி, ஏற்கனவே 10 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்கு குறை யாமல் கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை  கடுங்காவல் தண்டனையும் வழங்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. l  காவல்துறை அலுவலர், அரசுப் பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்கள், சிறைச்சாலை தடுப்புக் காவல் இல்லம், பிற  தடுப்பு காவல் இல்லம், பெண்கள் அல்லது குழந்தைகள் நிறு வனத்தின் பணியாளர் மற்றும் நிர்வாகத்தில் உள்ள நபர்கள், மருத்துவமனை பணியாளர் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மற்றும் நெருங்கிய உறவினரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டால் இதற்கு முன்பு குறைந்தது 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னை வழங்கப்பட்டது. இனி 20  ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங் காவல் சிறை தண்டனை வழங்கப் படும். இதை அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனையாகவும் அதி கரிக்கலாம். மேலும் அபராதமும் விதிக்கப்படும். 

ஆசிட் வீசினால் ஆயுள் - மரணம்

l ஆசிட் வீச்சு போன்ற குற்றங் களில் ஈடுபட்டால் முன்பு, 10 ஆண்டு கள் சிறை மற்றும் அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.  l  பெண்கள் மீது ஆசிட் வீச முயற்சி செய்தால் முன்பு 5 ஆண்டு கள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது. இனிமேல் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் ஒருவர் பாலி யல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டால் அவருக்கு பிரிவு 71 -இன்படி ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது. இனி மேல் அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்கப்படும். குறிப்பிட்ட சில இடங்களில் குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தி னால், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் பிரிவு 72 (1) -இன் படி  3 முதல் 5 ஆண்டு வரை சிறைத்  தண்டனை விதிக்கப்படும்.

கும்பல் வல்லுறவுக்கு மரண தண்டனை

l கல்வி நிறுவனங்கள், பொது  இடங்கள் உள்பட எந்த இடத்திலும் நடக்கும் கும்பல் பாலியல் வல்லு றவுக் குற்றங்களில் இதற்கு முன்பு பிரிவு 70 (2) - 18இன் படி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இனி மேல் மரண தண்டனை வழங்கப் படும். 

பாலியல் வல்லுறவு - மரணத்தை விளைவிக்கும் குற்றம்

*வல்லுறவு மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது தொடர்ச்சி யான   செயலற்ற நிலையை விளை விக்கும் காயத்தை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு குறைந்த பட்சமாக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இனி  ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.  l12 வயதுக்கு உட்பட்ட சிறுமி யை பாலியல் வல்லுறவுக்கு உள்ளா க்கினால், பிரிவு 65 (2) -இன் படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இனி ஆயுள் அல்லது மரண  தண்டனை வழங்கப்படும். 

பெண்ணை பின்தொடர்ந்தால்

பாலியல் நோக்கத்துடன் பெண்ணை பின் தொடர்வோருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் இருந்தது. தற்போது, பிரிவு 77 -இன்  படி ஜாமீனில் வெளிவர முடியாத  வகையில் 5 ஆண்டு சிறை, இரண்டா வது முறை குற்றத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆன்லைனில் பெண்களுக்கு பாலி யல் தொல்லை கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.  இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா சனிக்கிழமை யன்று (ஜன.11) சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம்  நிறைவேற்றப்படுகிறது. உடனடி யாக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்படும். அவர் கையெழுத்து போட்டதும் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.