tamilnadu

img

சிபிஎம் விருதுநகர் மாவட்ட முன்னோடி தோழர் ஜே.லாசர் மறைவு மாநில செயற்குழு இரங்கல்!

சிபிஎம் விருதுநகர் மாவட்ட முன்னோடி தோழர் ஜே.லாசர் மறைவு மாநில செயற்குழு இரங்கல்!

தோழர் ஜே.லாசர் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் விடுத்துள்ள இரங்  கல் அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் விருதுநகர் மாவட் டத் தலைவர்களில் ஒருவ ரும், தொழிற்சங்கத் தலைவ ருமான தோழர் ஜே. லாசர்  (77) அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேத னையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்  நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நன்மதிப்பை பெற்றத் தலைவர் தோழர் ஜே.லாசர் அவர் கள் கட்சியின் சாத்தூர் தாலுகா  செயலாளராகவும், அதன்  பிறகு சிவகாசி தாலுகா மற்  றும் நகரச் செயலாளராக வும், விருதுநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினராக வும் சிறப்பாக பணியாற்றிய வர். தொழிற்சங்கத்தின் முன் னோடித் தலைவராகவும் இருந்து செயல்பட்டவர். சிவகாசியில் முதலாளிகள், ரவுடிகள் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற வர். சிறை, தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் அனைத் தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர். குடிமனை பட்டா, ரேஷன் அட்டைகள்  பெற்றுத் தருவதிலும், மாண வர்கள் கல்வி பெறவும் முனைப்புடன் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற் றவர். சிவகாசி நகர்மன்ற உறுப்பினராகவும் செயல் பட்டவர். கடந்த 40 ஆண்டு காலமாக சிவகாசியில் கட்சி யின் முகமாக இருந்தவர். அவரது மறைவால் துய ருற்றுள்ள அவரது குடும் பத்தினருக்கும், விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்  நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.