tamilnadu

img

மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் மாநாட்டின் முக்கிய அம்சமாக அமையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு

மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் மாநாட்டின் முக்கிய அம்சமாக அமையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு

சென்னை, மார்ச் 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல்  6 வரை நடைபெறவுள்ளது.  இதனையொட்டி திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய “சீறுகின்ற செம்படைக்கு...” என்ற மாநாட்டு முன்னோட்ட பாடல் திங்க ளன்று வெளியிடப்பட்டது. ‘காம் ரேட் கேங்ஸ்டா’ குழுவினரின் இசை யமைப்பில், ‘தம்மா தி பேண்ட்’ குழு வினர் பாடியுள்ள இப்பாடலை கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்  முகம் வெளியிட்டார்.

முதல்வர்கள் பங்கேற்பு

பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மாநாட்டின் ஒரு முக்  கிய நிகழ்வாக ஏப்ரல் 3 மாலை “மாநில உரிமைகள் பாதுகாப்பு” திறந்தவெளி கருத்தரங்கம் நடை பெறவுள்ளது. இதில், கேரள முத லமைச்சர் பினராயி விஜயன், தமிழ்  நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா  ஆகியோர் பங்கேற்பை உறுதி  செய்துள்ளனர். பஞ்சாப், ஜார்க் கண்ட் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று பெ.  சண்முகம் தெரிவித்தார். “இந்த கருத்தரங்கம் தேசிய அள வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்  தும்” எனவும் சண்முகம் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசின் தாக்குதல்கள் “

ஒன்றிய அரசு மாநிலங்களுக் கான அதிகாரங்கள் மீது தொடர்ச்சி யான தாக்குதலை நடத்தி வருகிறது.  நிதி வழங்குவதில் பாரபட்சம், கல்வி யில் தலையீடு, மொழித்திணிப்பு என  பல்வேறு வழிகளில் மாநில உரிமை களை சிதைத்து வருகிறது” என்றார். ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள  சூழ்ச்சியான தொகுதி மறுசீரமைப் புக்கு எதிராக தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்  கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்தார்

சிபிஎம் நிலைப்பாடு

தொகுதி மறுசீரமைப்பு குறித்த  கேள்விக்கு பதிலளித்த சண்முகம்,  “எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்து வமும் குறையக்கூடாது. தொகுதி களின் எண்ணிக்கையை உயர்த்தி னால், சமச்சீர் விகிதத்தில் அனைத்து  மாநிலங்களுக்கும் உயர்த்த வேண்  டும். மக்கள் தொகை அடிப்படை யில் மட்டும் செய்வதை மார்க்சிஸ்ட்  கட்சி எதிர்க்கிறது” என தெளிவுபடுத்தினார்.

புதிய வடிவிலான நவபாசிசம் நவபாசிசம்

குறித்து விளக்கிய பெ.சண்முகம், “இந்திய அரசியல் சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ன்  நடவடிக்கைகள் பழைய பாணியி லான -  ஹிட்லர், முசோலினி காலத்து  - பாசிசத்தின் நவீன அல்லது புதிய  வடிவத்தின் சில கூறுகளைக் கொண்  டவையாக உள்ளன; பாசிசத் தன்மை  வாய்ந்த ஏராளமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசு களின் அதிகாரங்களை பறிப்பது, எதேச்சதிகார முறையில் இயங்குவது போன்றவை இதற்குள் அடங்கும்” என்றார். “நவபாசிசம் என்று சொல்வதால், பாஜகவின் இத்தகைய நடவடிக்கைக ளை குறைத்து மதிப்பிடுவதாக சில  விவாதங்கள் எழுந்துள்ளன. சிபிஎம் அரசியல் நகல் தீர்மானம் நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத் திற்கு உள்ளாகி இருப்பது வரவேற் கத்தக்கது. மாநாட்டில் விவாதித்து இதற்குரிய முடிவை மேற்கொள் வோம்” என தெரிவித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஜாக்டோ-ஜியோ பெருமளவிலான பங்கேற்போடு 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மார்ச் 23 அன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி யுள்ளது. ஏற்கெனவே பலமுறை முத லமைச்சரையும் சந்தித்து கோரிக்கை களை முன்வைத்துள்ளனர். ஆனால், அவை நிறைவேற்றப்பட வில்லை” என சுட்டிக்காட்டினார். “பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது உள்ளிட்ட திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். திமுக பல வாக்குறுதி களை நிறைவேற்றியுள்ளது, சில வற்றை செய்ய வேண்டியுள்ளது. சொல்லாத பலவற்றையும் செய்துள் ளனர். ஆனால் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பி னர் ஆர். பத்ரி, இயக்குநர் ராஜூ முரு கன், காம்ரேட் கேங்ஸ்டா தினேஷ், ஆர்.ஜே. பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிபிஎம் முனைப்போடு செயல்படும்

“இந்தியா’ அணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் கூறியதால், இந்தியா அணியை சிபிஎம் உடைக்கிறது என்ற தவறான புரிதல், ஊடகங்கள் மூலம் ஏற்படுத் தப்பட்டு உள்ளது. ‘இந்தியா’ அணி நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டது’ இந்தியா அணியில் இருந்த கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கட்சி, ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து பிரச்சனை களிலும் ஒத்துழைப்புடன் பணியாற்றும்’ என்று பெ.சண்முகம் விளக்கினார். “பாஜகவின் மதவெறி, வெறுப்பு அரசியல், எதேச்சதிகார நடவடிக்கை களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்தி கள் இணைந்து போராட வேண்டி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் சிபிஎம் முனைப்பாக செயல்படும். அதற்கான வழிமுறைகளை, திட்டங்களை அகில இந்திய மாநாடு உருவாக்கும்” என்றார்.

.அப்பாவு கருத்து ஏற்புடையதல்ல

திருநெல்வேலியில் சுத்தமாக சாதிப் பாகுபாடு இல்லை என்று பேர வைத் தலைவர் அப்பாவு கூறியிருப் பது ஏற்புடையதல்ல என்று பெ.சண்முகம் தெரிவித்தார். “கடந்த 5 ஆண்டுகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சாதிய வன்கொடு மைகள், பாகுபாடுகள் திருநெல் வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள் ளது. கொலை, சாதி ரீதியாக திட்டு வது போன்றவையாக இருக்கலாம். இதற்கு காவல்துறை பதிவு செய் துள்ள வழக்குகளின் எண்ணிக் கையே சாட்சியாக உள்ளது. ஆகவே, பேரவைத் தலைவரின் கருத்து உண்மைக்கு புறம்பானது” என்றார். தென்காசி பள்ளியில் நடை பெற்ற சம்பவம் குறித்து, “இந்தப் பிரச்சனையில் கட்சி தலையிட்டுள் ளது. அந்தப் பள்ளி ஆசிரியர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்” என கோரினார்.