தீக்கதிர் ஆண்டு சந்தா கோட்டாவை நிறைவு செய்த தா.பழூர் ஒன்றியம்
அரியலூர், ஆக. 12- அரியலூர் மாவட்டத்தில் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்க்கும் சிறப்பு இயக்கம் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதையொட்டி பல்வேறு இடைக்கமிட்டிகள் மிக தீவிரமான முறையில் ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்க பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தா.பழூர் ஒன்றியத்தில் மாவட்டக் குழு தீர்மானித்த 75 ஆண்டு சந்தா இலக்கை முடித்து, அதைத் தாண்டி 10 தினசரி சந்தாவிற்கான தொகையையும் வழங்கி உள்ளனர். இன்னும் பல கமிட்டிகள், கோட்டாவை நிறைவு செய்வதை நோக்கி தங்களது சந்தா சேர்ப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தா.பழூர் இடைக்கமிட்டி அரியலூர் மாவட்டத்திலேயே முதலில் தங்களுடைய இலக்கான 75 ஆண்டு சந்தாவை நிறைவு செய்ததையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.