மதுரை:
மதுரை - இராமேஸ்வரத்திற்கு விழாக்கால சிறப்புரயில் இயக்கவேண்டும். ஜோலார் பேட்டை - சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். தேஜஸ் ரயிலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மூன்று கோரிக்கைகளை ஏற்று உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தை அமாவாசையை முன்னிட்டு மதுரை-இராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமெனக் கோரியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று இம்மாதம் 10, 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரக்கோணத்திற்கு அப்பாலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு வசதியாக வேலூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை பெரும் தொற்றுக்கு முன்பு ஓடிய சாதாரண பயணி மின் வண்டியை மீண்டும் இயக்கஜனவரி 23 ஆம் தேதி தெற்குரயில்வே பொதுமேலாள ருக்கு கடிதம் எழுதி யிருந்தேன்.
எனது கோரிக்கையின் அடிப்படையில் சாதாரணபயணிகள் ரயில் வண்டி களை இயக்க இன்னும் முடிவு எடுக்காத நிலையில் ”ஜோலார்பேட்டை -சென்னை விரைவு வண்டியை இயக்கஅனுமதித்துள்ளோம். இது அரக்கோணத்திற்கு அப்பால் இருந்து வரும் பயணிகளின் வசதிக்கு உகந்ததாக இருக்கும்” என்று பொதுமேலாளர் எனக்கு பதில் அளித்துள்ளார். அதே போன்று தேஜஸ் விரைவு வண்டியை திண்டுக்கல்லில் நிறுத்த மறுப்ப தற்கான விளக்கம் கேட்டு நான் எழுப்பியிருந்த கேள்வி பிப்ரவரி 10 புதனன்று மக்களவையில் வர இருந்த நிலையில் பிப்ரவரி 9 அன்றே தேஜஸ் விரைவு வண்டி திண்டுக்கல்லில் நிற்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் ரயிலானது, சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாள்களில் காலை6 மணிக்கு கிளம்பும், அதே போல் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு கிளம்பும். இந்த ரயிலானது திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில்நிலையங்களில் மட்டுமே வழக்கமாக நின்று செல்லும்.இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொடைக்கானல் ரோடு ரயில்நிலையத்திற்கு பதிலாகதிண்டுக்கல் ரயில் நிலை யத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனது கோரிக்கையை ஏற்றுஏப்ரல் மாதம் முதல் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட எனது மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றியதற்காக தென்னக ரயில்வேக்கு எனதுநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.