சென்னை,ஜன.11- வனஉரிமைச் சட்டத்திற்கு விரோதமாக கால்நடை வளர்ப்பதை தவிர்க்க கோரும் அரசாணையை அமல்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொ துச்செயலாளர் சாமி நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: கால்நடைகள் வளர்ப்பு என்பது விவ சாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகும். வனத்தையொட்டிய கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பைத் தவிர்த்திட வேண்டுமென 09.01.2025 அன்று மாநில அரசு பிறப்பித்துள்ள அரசாணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்தி டும். இந்த அரசாணையை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது. நிறுத்தி வைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. வனச்சரக அலுவலர் காட்டுப்பன்றியை சுடுவதற்கு உரிய அனுமதி வழங்குவார் என் பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாகும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்திடவேண்டும். வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்திருத் தம் வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும். இதே போல் வனப்பரப்பளவை அதிகப்படுத் திட வனம் அல்லாத நிலங்களை வனமாக அறி வித்திடும் உரிமையை மாவட்ட ஆட்சியரு க்கு வழங்கி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள் ளது. பலதலைமுறைகளாக புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயி களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி அவர் களின் வாழ்வாதாரத்தை அழித்திடவே இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கும். ஆதிவாசி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான தமிழ்நாடு வனச்சீர்திருத்த சட்டங்களை மாநில அரசு ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.