தமிழக டிஜிபி-க்கான பரிந்துரையை விரைந்து அனுப்ப வேண்டும்! யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, செப். 8 - தமிழகத்தில் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டதில், தமிழ்நாடு அரசுக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக டிஜிபியை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பெயர்களை விரைந்து அனுப்பி வைக்குமாறும் யுபிஎஸ்சி-க்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட் ராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டது. ஆனால், பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் அளித்த வழிகாட்டுதல் அடிப்ப டையில், அடுத்த டிஜிபியின் பெயரை மூன்று மாதங்களுக்கு முன்னதாக யுபிஎஸ்சி-க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற வழிகாட்டு தலை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக, ஹென்றி திபேன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த வர் தன்னையும் அடுத்த டிஜிபி பரிந்துரை பட்டியலில் சேர்க்கக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்ததும், பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டதும், டிஜிபி பரிந்துரை பெயர்ப் பட்டியலை யுபிஎஸ்சிக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதிட்டார். இதையேற்ற உச்ச நீதிமன்றம், தமிழக டிஜிபியை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் களை விரைந்து அனுப்ப யுபிஎஸ்சி-க்கும், பெயர்கள் கிடைத்தவுடன் நிரந்தர டிஜிபியை தமிழ்நாடு அரசு நியமிக்கவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதுடன், தமிழ்நாடு அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.