பாலியல் கல்வி பாடத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பள்ளி பாடப்புத்தகங்களில் பாலியல் கல்வி பாடத்தில் மூன்றாம் பாலின த்தவரையும் சேர்க்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காவ்யா முகர்ஜி சாஹா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பள்ளி பாடப்புத்த கங்களில் பாலியல் கல்வி பாடத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த விவரம் என்சிஇஆர்டி, எஸ்இஆர்டி புத்தகங்க ளில் இடம் பெறவில்லை. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாரா ஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாட கா ஆகிய மாநிலங்களில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது’ என அந்த மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, “பாலியல் கல்வி பாடத்தில் மூன்றாம் பாலி னத்தவர்களை சேர்ப்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்” என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.