பிற மொழி இலக்கியங்களை தமிழில் கொண்டுவர வேண்டும் : சல்மா எம்.பி.
திண்டுக்கல், செப்.3- பனி நிறைந்த மலைகளுக்கும் தெருக் களுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் ரஷ்ய இலக்கியங்கள் போல் பிற மொழி இலக்கியங்கள் தமிழில் கொண்டுவர வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் சல்மா தெரிவித்தார். திண்டுக்கல் புத்தக திருவிழாவில் செவ்வாயன்று நடைபெற்ற சிந்தனை யரங்கில் “வாழ்க்கையும் இலக்கிய மும்” என்ற தலைப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். கவிதையில் பெண்ணிய சிந்தனை தனது கவிதைகள் குறித்து பேசிய சல்மா, “எனது கவிதையில் ஒரு கரு வுற்ற குரங்கு வீட்டு ஓட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கும். அந்த குரங்கின் வயிற்றில் உள்ள கரு எந்த குரங் கின் மூலம் உரு வானது என்கிற கவலையும் இல்லை” என் றார். “ஒரு பெண் தன் குழந்தைக்கு இனி ஷியலை மிக முக்கியமாக பார்க்கிறார். ஆனால் குரங்கு தன் குழந்தைக்கான அடையாளத்தைத் தேடுவது தேவை யற்றது. இதைத்தான் அந்த கவிதை யில் சொல்லியிருக்கிறேன்” என்று விளக்கினார். மொழிபெயர்ப்பின் அவசியம் தமிழ்நாடு அரசின் புத்தக வெளி யீட்டு முயற்சிகளைப் பாராட்டிய சல்மா, “பிற மொழிகளில் உள்ள கலாச்சா ரத்தையும் வாழ்வியலையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கும்போது அந்த பகுதிக்கே சென்றுவந்த அனு பவம் கிடைக்கும்” என்றார். திருக்குறள் ஆப்பிரிக்க மொழியி லும் அரபு மொழியிலும் மொழிபெய ர்க்கப்படுவதையும், தனது படைப்பு ஆர்மேனியன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும் குறிப்பி ட்டார். “பொருட்கள் பண்டமாற்றம் செய்வது போல் இலக்கிய மாற்றம் செய்யப்படுகிறது” என்றார். பழனி கோட்டாட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராசிரியர் முனைவர் மு.சரவணன் வரவேற்றார்.