tamilnadu

img

8 லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு உடனடி பென்சன் மறுசீரமைப்பு வேண்டும் ஸ்டேட் வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

8 லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு  உடனடி பென்சன் மறுசீரமைப்பு வேண்டும்

ஸ்டேட் வங்கி தொழிற்சங்க தலைவர்கள்  கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 29- கடந்த 30 ஆண்டுகளாக ஓய்வூதி யம் சீரமைக்காமல், 8 லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் வரலாற்று அநீதியை உடனே களைய வேண்டும் என பாரத ஸ்டேட் பேங்க் முன்னாள் தொழிற்சங்க தலை வர்கள் கூட்டமைப்பு (AFCCoM) ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இரண்டு வாரங் களுக்கு முன்பு (ஜூலை 13) நடைபெற்ற இக்கூட்டமைப்பின் ஒன்பதாவது பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் திற்கு அமைப்பின் தலைவர் எஸ்.பி. இராமன் தலைமை வகித்தார். சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை பொதுக்குழு கூட்டத்தில், 1995 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட ஓய்வூதிய விதிமுறை 35(1)இன் படி, வங்கித்துறையில் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் ஒவ் வொரு தருணத்திலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் நடைமுறையில் உள்ள விகிதப்படி வங்கி ஓய்வூதி யர்களுக்கு ஓய்வூதியம் சீரமைத்து உயர்த்தித் தரப்பட வேண்டும். ஆனால் இந்த சட்ட விதிமுறை முப்பது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் வங்கி ஓய்வூதியர்கள் தங்கள் சட்டப்பூர்வமாக பெற வேண்டிய பென்சன் உயர்வைப் பெறா மல் அகால மரணமடைந்த கெடுவாய்ப் பான சூழலை அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நபார்டு போன்ற வங்கிகளுக்கு வழங்கப்படு வதைப் போல பென்சன் சீரமைப்பு 8  லட்சம் வங்கி ஊழியர்களுக்கும் வழங்க இந்திய வங்கிகள் நிர்வாகம்  (IBA) முன்வர வேண்டும். கடந்த  மார்ச் 8, 2024 அன்று கையெழுத்தான ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய கருணைத் தொகை உயர்வும் தாமத மாகி வருகிறது. இயற்றப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏற வங்கி நிர்வாகங்கள் ஓய்வூதியர்களை நிர்ப்பந்திக்காமல் தாமதமின்றி பென்சன் மறுசீரமைப்பையும், ஆண்டு தோறும் கருணைத் தொகை உயர்வை யும் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகள் பாதுகாப்பு 2025-26 நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் 47,000 கோடி ரூபாய் திரட்டும் இலக்கை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31, 2025 நிலவரப்படி நாட்டில் செயல்படும் 85,116 பொதுத்துறை வங்கிக் கிளை கள் 1.78 லட்சம் கோடி இலாபத்தை அர சுக்கு ஈட்டித் தந்துள்ளன. எந்த சூழ லிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். வரி குறைப்பு வேண்டுகோள் சர்வதேச அளவில் கனடாவில் 5%, சிங்கப்பூரில் 7%, சீனாவில் 13% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலை யில், இந்தியாவில் அதிகபட்சம் 28%  ஜிஎஸ்டி விதிக்கப்படுவது நியாய மற்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரசு பெற்ற ஜிஎஸ்டி தொகை 22.08  லட்சம் கோடி என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் பணக் காரர்கள் வாங்கும் தங்கத்துக்கு 3%,  வைரத்துக்கு 1.5% மட்டுமே வரி விதித்து, ஏழை எளிய மக்கள் வாங்கும்  பொருட்களுக்கு 28% வரை வரி விதிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். ‘வரி தீவிரவாதம்’ (Tax Terrorism) என்ற விமர்சனத்தை தவிர்க்க விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து நல்ல முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். எல்ஐசி மற்றும் ஆரோக்கிய காப்பீடு 55 லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்ட எல்ஐசி நிறுவனத்தை பலவீனப்படுத்தும் மசோதாக்களை அரசு கைவிட வேண்டும். 9 வெளி நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்ட மடைந்து இந்தியாவை விட்டு வெளி யேறி 64,780 கோடி ரூபாய் நஷ்டத்தை பாலிசிதாரர்களுக்கு ஏற்படுத்தி யுள்ளன. மேலை நாடுகளைப் போல் அனைவருக்கும் சுகாதார வசதி (Universal Health Care) திட்டத்தை அறிமுகம் செய்வதோடு, ஹெல்த் இன்சூரன்சுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. கூட்டத்தில், கூட்டமைப்பின் செய லாளர் எம்.கே.மூர்த்தி, துணைத்தலை வர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செய லாளர் எம்.முருகையா, உதவி பொரு ளாளர் வீ.பூமிநாதன், ஸ்டேட் பேங்க் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக் குழு உறுப்பினர் எம். சந்திரா கில்பர்ட் வரவேற்புரை நிகழ்த்த, என். பாண்டு ரங்கன் நன்றியுரை வழங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோவை எம்.ரகுநாதன், வேலூர் ஆர்.லோகநாதன், பரவை எஸ்.பால சுப்பிரமணியன், நாகர்கோவில் அக மது ஹுசைன், சென்னை எஸ்.ரத்தி னவேல் ஆகியோரும் கலந்துகொண்ட னர். பாரத ஸ்டேட் பேங்க் ஒரத்தநாடு கிளையின் முன்னாள் செயலாளர் வி.சம்பத், வடக்கூர் கிளையின் முன்னாள் செயலாளர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.