tamilnadu

img

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு முதன்முறையாக வலசை வந்த புள்ளிமூக்கு வாத்துகள் பறவைகள் கணக்கெடுப்பு ஆய்வில் தகவல்

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு  முதன்முறையாக வலசை வந்த புள்ளிமூக்கு வாத்துகள் பறவைகள் கணக்கெடுப்பு ஆய்வில் தகவல்

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூர்  பகுதிக்கு புள்ளி மூக்கு வாத்துகள் முதன்முறையாக வலசை வந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில்  நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருடம் தோறும் நடைபெற்று வரு கிறது. அதன்படி, இந்த வருடத்துக்கான பறவைகள் கணக்கெடுப்புப் பணி  தஞ்சாவூர் அருங்கானூயிர் காப்பு  மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தஞ்சாவூர் வனக் கோட்டத்தின் சார்பாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதையடுத்து, தஞ்சாவூர் வனச் சரகர் ரஞ்சித், வனவர்கள் இளைய ராஜா, ரவி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் தலைமையில் 15 தன்னார்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை பறவையில் கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி, வல்லம் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வளாக காடு களில் 70 வகை பறவை இனங்களைச் சேர்ந்த 1,113 பறவைகள் கணக்கிடப் பட்டன, மேலும், வளாகத்தில் உள்ள குளத்தில் வலசைப் பறவையான புள்ளி மூக்கு வாத்துகள் காணப் பட்டது. இந்த வாத்துகள் தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் காணப்படுவது இதுவே முதல் முறை.  அதே போல்  செம்மார்பு குக்குருவான் குருவிகளும் அதிக அளவில் காணப்பட்டன. தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காடுகளில்  58 பறவை இனங்க ளும், 667 பறவைகளும் கணக்கெடுக்கப் பட்டன. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத் தில் சென்னம்பட்டி, ஆச்சம்பட்டி காப்புக் காடுகளிலும், கும்பகோணம் வனச் சரகத்தின் சார்பில் மகாராஜபுரம் அணைக்கரை பகுதிகளில் தன்னார்வ லர்கள் குழுவினரால் பறவைகள் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.