ரவுடிகள் மீது நடவடிக்கை வலியுறுத்தல்
விருதுநகர், ஜூன் 2- விருதுநகர் நகராட்சிக் குட்பட்டது பாத்திமாநகர் பகுதி. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டமக்கள் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக இங்கு ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், ஆட்டோவை சமூக விரோதிகள் தீ வைத்து எரித்தனர். இதில் பஜார் காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைந்த தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப் பதிவு செய் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல்துறை மீது நம் பிக்கை இழந்த மக்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். முற்றுகையிட்டவர்களை சமா தானப்படுத்திய காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்பதா வது: பாத்திமாநகரில் பிள்ளையார் கோவில் உள்ளது. இதன் அருகே, சமூக விரோத கும்பல்கள் கூடி வரு கிறது. இந்தக் கும்பலில் பாத்திமா நகர், முத்துராமலிங்கம் நகர், அல் லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர் கள் திறந்தவெளியில் மது அருந்து வது, கஞ்சா புகைப்பது, அவ்வழியே செல்லும் பெண்களை கேலி செய்து, ஆபாசமாக பேசு வது போன்ற செயல்களில் ஈடுபடு கின்றனர். யாராவது தட்டிக் கேட்டால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருகின்ற னர். காவல்துறையினர் இந்தக் கும் பல் மீது சட்டபடி வழக்குப் பதிவு செய்யாமல் வெறுமனே எச்சரித்து விட்டு விடுகின்றனர். இதனால், குற்றவாளிகள் பயமின்றி தொட ர்ந்து குற்றங்கள் செய்கின்றனர். பிள்ளையார் கோவில் தெரு பகுதி யில் பகல், இரவு நேரங்களில் காவல் துறை பாதுகாப்பு வழங்கி, அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.