tamilnadu

img

தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. இதனால், மாநில மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க கோரி மதுரையை சேர்ந்த பொன்குமார் என்பவர் உயர்நீதிமன்றக் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரஞ்சு, ஜெர்மன், உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கற்கக்கூடாதா என கேள்வியெழுப்பினர். மேலும், தாய் மொழியை ஊக்கப்படுத்தவேண்டும் என்கிறார் பிரதமர், ஆனால் இந்தி, ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர். தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். சிதையாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது. என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.