காங்கிரஸ் மூத்த தலைவர் உமாங் சிங்கர்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் மத்தியப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரும் சதித் திட்டம் தீட்டி வருகிறது. மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 50 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமைகளை பறிக்கவே பாஜகவின் முக்கிய சதி ஆகும்.
மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி
அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் நரேந்திர மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கும் கூட சீட் வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை. இது ஏன்?
தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே
மகாராஷ்டிராவில் பாஜக கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்துள்ளது. சின்ச்வாட் பகுதியில் ஒரு பெண்ணை பாஜக மாநில தலைவரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் வைத்தே மிரட்டி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் ஆவார்.
ஆர்ஜேடி வேட்பாளர் முகமது இஸ்ராயில் மன்சூரி
நிதிஷ் குமார் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சராக உள்ளார். 20 ஆண்டுகளாக ஊழல், பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உச்சத்திலேயே உள்ளன. பீகார் மக்கள் இந்த அடாவடியை எவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருப்பார்கள்? தற்போதைய சூழ்நிலையில் பீகாரில் முழுவதும் மாற்றத்தின் ஒரு அலை பரவியுள்ளது. அந்த அலை தேசிய ஜனநாயக கூட்டணியை சுக்கு நூறாக நொறுக்கும்.
 
                                    