மன்னார்குடியிலிருந்து மாங்குடி வரை அரசுப் பேருந்து இயக்குக! சிபிஎம் சாலை மறியல்
திருவாரூர், ஆக. 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் - மன்னார்குடி சாலையில் கமலாபுரம் பகுதியில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில், மக்கள் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மன்னார்குடியிலிருந்து கமலாபுரம் வழியாக, மாங்குடி வரை அரசு பேருந்து இயக்க வேண்டும். நூறு நாள் வேலைக்கான சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் வசுமதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஜெயபால், ஒன்றியச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, வி.தொ.ச. மாவட்டத் தலைவர் பிரகாஷ், கிளைச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.