குடிநீர், சாலை, மின்சாரம், பட்டா, மயான வசதி செய்துதரக் கோரிக்கை திருச்சி புறநகரில் 245 இடங்களில் போராட்டம்
சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி, அக். 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி புறநகரில் ஒரேநாளில் 150 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி புறநகர் மாவட்டத்தில், ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் மக்களின் அடிப் படைத் தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்துக் கிளைகளும் போராட்டங் கள் நடத்துவது வழக்கம். 245 இடங்களில் போராட்டம் அந்த வகையில், திருச்சி புறநகர் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமையன்று 245 இடங்களில் மக்கள் கோரிக்கைப் போராட்டங் கள் துவங்கின. இதில், பல்லாயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். குடிநீர், சாலை வசதி, பாலம் கட்டுவது, வாய்க்கால் மராமத்து பணிகள், மயானப் பாதைகள், மின்சாரம், சமுதாயக் கூடம், குடிமனைப் பட்டா, ஆக்கிரமிப்புகள் அகற்றம், நெல் கொள்முதல் நிலையங்கள், சாக்கடை வசதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. டி. ரவீந்திரன் - எம். சின்னத்துரை எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை (அக். 7) திருவெறும் பூர் வட்டம், வடக்கு ஒன்றியம், தா. பேட்டை, உப்பிலியபுரம், மணப்பாறை, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர் கிழக்கு - மேற்கு, துறையூர், முசிறி, வையம்பட்டி, தொட்டியம், மருங்காபுரி ஆகிய 14 ஒன்றிய - தாலுகா, நகரப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடை பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிக் கிளை செயலாளர்கள், ஒன்றிய - தாலுகா குழு நிர்வாகிகள், போராட்டங்களுக்குத் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்தி ரன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயலாளர்கள் கே.சிவராஜன் (திருச்சி புறநகர்), எஸ். சங்கர் (புதுக்கோட்டை), கோவி. வெற்றிச் செல்வம் (திருச்சி மாநகர்), ரமேஷ் (பெரம்பலூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரிய லூர், பெரம்பலூர், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங் களின் முன்னணி தலைவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னின்று போராட்டங்களை வழிநடத்தினர். சில இடங்களில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும், மழை உட்பட அனைத்து இடையூறுகளையும் தாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், அடிப்படைப் பிரச்சனைகளுக் காக எழுச்சிமிகு மக்கள் இயக்கத்தை நடத்தி னர். செவ்வாய்க்கிழமை மட்டும் 10 ஆயிரம் பேர் போராட்டங்களில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். புதன்கிழமை யன்றும் (அக். 8) நூற்றுக்கும் மேற்பட்ட இடங் களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
நரிக்குறவர் குடியிருப்புக்கு முதன்முறையாக வந்த குப்பை வண்டி
திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் பகுதி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு, ஊராட்சி குப்பைகள் சேகரிக்கும் வண்டி, இதுநாள் வரை வந்து குப்பைகளை அப்புறப்படுத்தியது இல்லை. இதனை கண்டித்தும், குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; கொசு மருந்து அடிக்க வேண்டும்; சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தியும், கிளைச் செயலாளர் அமாவாசை தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குப்பை சேகரிக்கும் வண்டியையும் தொழிலாளர்களை உடனடியாக நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அனுப்பி அங்கிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் தண்ணீர் தொட்டியையும் சுத்தப்படுத்தினர். கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.