மதுரை:
இபிஎஸ் 95 ஓய்வூதிய திட்டத்தின்படி தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி குறைந்த ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கு கேரள மாநில அரசு வழங்குவது போல் தமிழக அரசும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று இபிஎஸ் 95 பென்சனர்கள் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச்செயலாளர் வி.கே.ராஜரத்தினம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் 65 லட்சம் ஓய்வூதியர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணி நிறைவு பெற்று இபிஎஸ் 95 திட்டத்தின்படி குறைந்த ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப் பட்டு வருகிறது.2013 ஆம் ஆண்டு கோச்சாரியா கமிட்டி இந்த ஓய்வூதியர்களுக்கு இடைக்காலநிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கிவிட்டு அதன்பின் ஓய்வூதியத் தொகை யை இவ்வளவு என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு அறிவுறுத்தியது. அதை இதுவரை ஆண்ட மத்திய அரசுகள் இரண்டும் கண்டு கொள்ளவில்லை.கேரளத்தில் ஐந்து லட்சம் இபிஎஸ் 95 ஓய்வூதியர் களுக்கு கேரள மாநில அரசு மாதம் ரூ.1,500 உதவித் தொகை ஓய்வூதியமாக தற்போது வழங்கி வருகிறது.ஆகவே தமிழகத்தில் இபிஎஸ் 95 ஓய்வூதிய திட்டத்தின்படி குறைந்த ஓய்வூதி யம் பெற்று வரும் ஆறு லட்சம் ஓய்வூதியர்களுக்கு கேரள அரசு வழங்குவது போல உதவித்தொகை வழங்க வேண்டும். அதை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.இக்கோரிக்கை மனுவை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் அமைப்பின் நிர்வாகிகள் அளித்தனர். சிபிஎம் மற்றும் திமுக தேர்தல் வாக்குறுதியில் மேற்கண்ட கோரிக்கையை இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.