tamilnadu

மழை காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பருப்பு, எள், பருத்தி பயிர்கள் பாதிப்பு

மழை காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பருப்பு, எள், பருத்தி பயிர்கள் பாதிப்பு

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மார்ச் 11, 12 ஆகிய  இரண்டு நாட்களில் பெய்த மழையால் கட லோர டெல்டா மாவட்டங்களில் பருப்பு வகைகள், எள் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை பிப்ரவரி ஆரம்பத்தில் அறுவடை செய்துவிட்டு பச்சைப் பயறு மற்றும் உளுந்து போன்ற  பருப்பு வகைகளை பயிரிடத் தொடங்கினர்.  பருப்பு வகைகளில், பச்சைப் பயறு மயிலாடுதுறையில் 26,000 ஹெக்டேருக்கும் மேலாகவும், நாகப்பட்டினத்தில் 14,000 ஹெக்டேரி லும் பயிரிடப்பட்டுள்ளது. அதேசமயம் உளுந்து மயிலாடுதுறையில் 23,000 ஹெக்டேரிலும், நாகப்பட்டினத்தில் 1,400 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள் ளது. சில விவசாயிகள்  நாகப்பட்டி னம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங் களில் தலா ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிட்டுள்ளனர். அதே போல எள் பயிரும் இரு மாவட்டங்களில் சில நூறு ஹெக்டேரில் பயிரிடப் பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நாகப்பட்டினம், கீழையூர் வட்டங்களிலும், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் மற்றும் கொள்ளிடம் வட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த கன மழையால் பருப்பு வகைகள் மற்றும் பருத்தி, எள் பயிர்கள் பாதிப்புக்குள்ளா கின. குறிப்பாக நாகப்பட்டினம், மயி லாடுதுறை என இரு மாவட்டங்களிலும் சில ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இன்னும் அறு வடை செய்யப்படவில்லை. அறுவடைக் காக காத்திருந்த இந்த பயிர்கள் மழைக்காரணமாக வீழ்ந்து விட்டன. 1.5 ஏக்கர் பரப்பளவில் பச்சைப் பயறு...  நாகப்பட்டினம் மாவட்டத்தின் பாலையூரைச் சேர்ந்த 45 வயது விவ சாயி பி.மணிகண்டன் கூறுகை யில், “சம்பா அறுவடைக்குப் பிறகு நான் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் பச்சைப் பயறு பயிரிடத் தொடங்கினேன். அறு வடைக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. ஆனால் மழைக்காரணமாக எனது வயல் நீரில் மூழ்கியுள்ளது. வடி கால் கால்வாய்களில் தடைகள் இருப்ப தால், மழைநீர் எதிர்பார்த்தபடி விரை வாக வடிகட்டப்படவில்லை” என கவலையுடன் கூறினார்.  விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது, “நாகப்பட்டினம், மயி லாடுதுறை மாவட்டங்களில் நாங்கள் நிலைமையை கண்காணித்து வரு கிறோம். மேலும் விவசாயிகள் வயல் களில் இருந்து நீரை விரைவாக வடிகட்டு வதற்கான வழிகளை செய்ய அறி வுறுத்துகிறோம்” என அவர் கூறினார்.

வானிலை அறிக்கைகளும் ஒரு காரணம்

மார்ச் 11, 12ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. ஆனால் இந்த கனமழைக்கான வானிலை முன்னறிவிப்பு தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 2 டிகிரி செல்ஸியஸ் அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலைச் செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது.  மார்ச் 9ஆம் தேதியே வானிலை திடிரென மாறியது. அதாவது தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை முதல் மதியம் 3 மணி வரை அதிக வெயிலும், அதன்பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை பெரியளவில் வெளியிடப்படவில்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் மார்ச் 10ஆம் தேதி மாலை, கனமழைக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என அறிவித்தது. அதே போன்று கனமழை எச்சரிக்கை விடுக்கட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வேறு இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தினார்கள். மற்றபடி கோடை மழையின் தாக்கத்தை தெளிவாக குறிப்பிடவில்லை. ஓரிரு இடங்களில் கனமழை என அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் வயல்களில் தண்ணீர் மேலாண்மை பணியை பெரியளவில் மேற்கொள்ளவில்லை. ஆனால் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் புயல் காலங்களில் வரும் கனமழை போன்று புரட்டியெடுத்தது.  மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை வெறும் 2 நாள் கனமழையில் இழந்துள்ளனர். இதனால் வானிலை முன்னறிவுப்புகளில் தெளிவாக இத்தனை செ.மீ., அளவில் கனமழை பெய்யும், இத்தனை நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையங்கள் வெளியிட்டால் விவசாயிகள் உஷார் அடைந்து தங்களது பயிர்களை காப்பற்றுவார்கள்.