215 இடங்களில் மழை - வெள்ள நிவாரண மையங்கள்: அரசு அறிவிப்பு
சென்னை, அக்.27- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழு வதிலும் பரவலாக மழை பெய்து வரு கிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வும், மக்கள் அச்சமின்றி தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவும் வகையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி வாயிலாக வும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவி களை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. பொது மக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக அக்.17 முதல் அக்.25 வரை 408 நிலையான மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 574 மழைக் கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு 24,146 நபர்கள் பயனடைந்துள்ள னர். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அக்.22 முதல் அக்.27 வரை மொத்தம் 4,9,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில், மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2000-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆங்கா ங்கே தயார் நிலையில் உள்ளன. பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்றிட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் அலு வலர்கள், பொறியாளர்கள், பணி யாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரியம் களப் பணியாளர் கள் 2,149 பேரும் தயார் நிலையில் உள்ளனர்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.