அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே விதிமுறைகளை மீறி தனியார் கல்குவாரி நிறுவனம், நீர் வரத்து பாதைகள் மறித்து,கண்மாய் கரையில் சாலை அமைக்க உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுத் தந்த வழக்கறிஞருக்கு பாராட்டு விழா மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே உள்ளதென்பாலை கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் விஷ்ணுசூர்யா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கல்குவாரியை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கனரக வாகனங்கள் புலியூரான், செம்பட்டி வழியாக மாநில நெடுஞ்சாலையை அடையும் வகையிலேயே அரசு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால்,அரசு அதிகாரிகள் ஆதரவுடன் புங்கன்குளம், பன்னிக்குண்டு, மேலக்கண்டமங்கலம் கண்மாய்களையும், நீர்வழிப்பாதைகளையும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.ஆனாலும் அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் என்.
கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு டிசம்பர் 14 அன்று விசாரித்தனர்.அப்போது எம்.கண்ணன் தரப்பில்வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, விஷ்ணுசூர்யா நிறுவனம் பன் னிக்குண்டு கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைத்திருக்கிறது. அதனைஅகற்ற 24.06.19 அன்று கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 9 கிராமமக்கள் பங்கேற்ற சமாதான கூட்டத்தில்நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டசெம்பட்டி கிராமம் வழியாக செல்லும்மாநில நெடுஞ்சாலையினை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த கிராம மக்கள்ஆட்சேபணை தெரிவித்தால் மேற்படி கிராம மக்களின் கருத்துகள் கேட்கப் பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்திருந் தார். ஆனால், தனியார் நிறுவனமோ, நீர்வரத்து ஓடையை மேவி, அதன் வழியாக, கண்மாய் மற்றும் கண்மாய் கரைமீது கனரக வாகனங்களை இயக்க அனுமதி அளித்துள்ளார். இது சட்டவிரோதமானது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. கோட்டாட்சியரின் வழங்கி
யிருக்கும் அனுமதியை ரத்து செய்தும்,கனரக வாகனங்கள் இயக்கவும், சாலைஅமைப்பதற்கும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.இதையடுத்து, விஷ்ணுசூர்யா நிறுவனம் பன்னிக்குண்டு கண்மாய் மற்றும்ஓடை, கரை பகுதிகளில் எந்த வித சாலைகளையும் அமைக்க கூடாது எனவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துஉத்தரவிட்டனர்.
இந்த தகவலறிந்த புலியூரான், கோணப்பணயேந்தல், பன்னிக்குண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தனியார் கல்குவாரி நிறுவனத்தினர், சாலை அமைக்கும் பணியை தொடர்ந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் திரண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியார் நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டனர். அதன் பிறகே, வட்டாட்சியர், நீதிமன்றத்தின் தடை உத்தரவின் பேரில், கண்மாய் கரையில் சாலைஅமைக்க தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், கோணப்பனேந்தல் கிராமத்தில், வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யுவிற்கு பாராட்டு விழா மற்றும் மரம்நடு விழா கிராம மக்கள் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சோலை, குலசேகர நல்லூர்ஊராட்சிமன்றத் தலைவர் சிவமாரியப் பன், கவுன்சிலர் வி.சுப்புலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன், சிபிஎம்மாநிலக் குழு உறுப்பினர் எம்.கண்ணன்,சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்கமர்தீன், கீழக்கண்டமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணம்மாள் மருதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மரக் கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஏற்புரை வழங்கினார். இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன், முத்துராமலிங்கம் ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர்.