காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
பிரதமர் மோடி வென்ற வாரணாசி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு தரவுகளை யும், சிசிடிவி காணொலியையும் வெளியிடுங்கள். வாக்குகளை திருடித்தான் மோடி வென்றார் என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
பாஜகவின் கல்வி காவிமயமாக்கல் பல்கலைக்கழகங்களில் தொடங்கியதிலிருந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பாரபட்சம் மாணவர்களின் கல்வியையும் வாழ்க்கையையும் பெரியளவில் பாதித்து வருகிறது. பாஜக வீழ்ந்தால்தான் கல்வி உயரும். இதை தவிர வேறு வழி இல்லை.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
யமுனையில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. தெருக்கள் மூழ்கியுள்ளன ; மக்கள் மடிகிறார்கள். ஆனால் தில்லி பாஜக அரசாங்கம் வெள்ளத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லி அரசாங்கம் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்துள்ளதால், சாதாரண மழை கூட பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆர்ஜேடி மூத்த தலைவர் சஞ்சய் யாதவ்
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை முடிவடைந்தது. தேர்தல் ஆணையம் - பாஜகவின் வாக்கு திருட்டு செயலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரைக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக பீகார் மக்கள் இதை ஒரு புரட்சியாக மாற்றியுள்ளனர். நாடு இந்த யாத்திரையை விரிவாக அறிந்துள்ளது.