tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் ‘கோட்டை முற்றுகை’ போராட்டம் தமிழகம் முழுவதும் காவல்துறை அடக்குமுறை - கைது!

மாற்றுத் திறனாளிகள் ‘கோட்டை முற்றுகை’ போராட்டம் தமிழகம் முழுவதும் காவல்துறை அடக்குமுறை - கைது!

உதவித்தொகையை ரூ. 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும்

சென்னை, ஏப். 22 - சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை மாற்றுத் திறனாளி கள் அறிவித்திருந்த நிலையில், அவர் களைச் சென்னை வரும் வழியிலேயே தடுத்து, ஆயிரக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தது. ரயில்கள், அரசுப் பேருந்து, தனி யார் வாகனங்களில் வந்தவர்களை ஆங்காங்கே மடக்கி கைது செய்த போலீசார், இந்த அடக்குமுறைகளை யும் மீறி, சென்னை வந்தவர்களை, தள்ளுவண்டியோடு தூக்கிச் சென்று அராஜகத்தில் ஈடுபட்டனர்.

1 லட்சம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தம்

ஆந்திரா மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும், ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து, மாற்றுத் திற னாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும்; வருவாய்த்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவித் தொகைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமான காரணமின்றி உத வித்தொகை நிறுத்தப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். ஆட்சியர்கள் தலைமையிலான வயதுத் தளர்வு குழுவை ரத்து  செய்துவிட்டு, வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்; வருவாய்த்துறை மூலம் உத வித்தொகை வழங்குவதை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க வேண்டும்.

நூறுநாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தில் விண்ண ப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வேலை அட்டை வழங்குவதுடன், நூறுநாட்கள் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் வேலை என்பதை மீண்டும் வழங்க வேண்டும், 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய பணித் தலத்திற்கு வாகன ஏற்பாடு, பணித் தலத்தில் கழிப்பறை உள்ளிட்ட சட்டப்படியான வசதிகளை செய்துதர வேண்டும்; சமூகப் பாது காப்பு திட்ட ஒதுக்கீடுகளில் 25 விழுக் காடு கூடுதலாக வழங்க வேண்டும்; ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதி யின்படி வேலை நாட்களை 125 நாட் களாக உயர்த்தி வழங்க வேண்டும். 2024-25ஆம் ஆண்டில் வேலை செய்த நாட்களுக்கான ஊதிய பாக்கி களை உடனடியாக வழங்க வேண்டும்; ஊதிய தாமதத்திற்கான சட்டப்படியான தாமதக் கட்டணத்தைத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) முதல் தொடர் கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இருந்து போராட்டத்திற்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட பேருந்துகளை மறித்து காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ரயில் நிலையங்களுக்கு வந்த மாற்றுத் திறனாளிகளை கைது செய்தனர். பயணச்சீட்டு வாங்கி ரயில், பேருந்துகளில் ஏறியவர்களையும், புறப்பட்டவர்களையும் மடக்கி மடக்கி கைது செய்தனர். தனியார் பேருந்து, வேன்களில் புறப்பட்டவர்களை யும் கைது செய்தனர். தனியார் வாகன உரிமையாளர்களை மிரட்டி வாகனங்க ளை அனுப்பாமல் தடுத்தனர். இதனையும் மீறி சென்னைக்கு, கிளாம்பாக்கம், கோ யம்பேடு பேருந்து நிலையம் வந்த நூற் றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் மாற்றுத்திற னாளிகளை காவல்துறையினர் மோசமாக கையாண்டனர்.

ஊடகங்களைச் சந்திக்க  விடாமலும் அராஜகம்!

இத்தகைய கெடுபிடிகளையும், அடக்குமுறைகளையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் எழிலகத்திற்கு காலை முதலே வந்தவர்களை, ஒவ்வொருவராக வர வரக் கைது செய்தனர். எழிலக வளா கத்திற்கு உள்ளேயும் புகுந்து தள்ளு வண்டி யோடு தூக்கிச் சென்று கைது செய்தனர். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல்  தலைவர் எஸ். நம்புராஜன், சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொ துச்செயலாளர் பா. ஜான்சிராணி, பொரு ளாளர் சக்ரவர்த்தி உள்ளிட்டோரையும் காவல்துறையினர் அடாவடியாக கைது செய்தனர். ஊடகங்களிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. மாற்றுத் திறனாளிகளை லாவகமாகக் கையாளாமல் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அராஜகமாக நடந்து கொண்டதால் தள்ளு - முள்ளு ஏற்பட்டது. இதனால் பலருக்குக் காயம், கடுமையான உடல் உபாதை ஏற்பட்டது. தள்ளுவண்டி, மூன்று சக்கர வண்டி, ஊன்று கோலுடன் வந்தவர்களையும் காவல்துறையினர் மிகமோசமாக நடத்திக் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் சுமார் 20 மண்டபங்களில் அடைக்கப் பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட முறையாக செய்து கொடுக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்தனர்இந்தப் போராட்டத்தை தடுப்ப தற்காக காவல்துறை, மாநிலம் முழு வதும் சங்கத்தின் மாநில - மாவட்டத் தலைவர்கள், முன்னணி ஊழியர் களை வீட்டுக் காவலில் வைத்தது. இதனையும் மீறி தமிழ்நாடு முழுவதும்

கோரிக்கைகள் நிறைவேறும்  வரை போராட்டம் தொடரும்

தலைவர்கள் அறிவிப்பு இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, “தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு வந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்து சுமார் 20 மண்டபங்களில் வைத்துள்ளனர். நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளைத் தீர்க்காமல், போராட்டம் தொடங்கும்போது சமூக நலத்துறை அமைச்சரும், துறைச் செயலாளரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்; ‘தமிழகம் முழுவதும் காவல்துறையின் அராஜகத்தை நிறுத்த வேண்டும்; சென்னையில் கைது செய்தவர்களை, ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகள் வழங்குவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு வருவோம்’ என்று தெரிவித்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கைது செய்து வைக்கப்பட்டுள்ள மண்டபம் உள்ளிட்ட இடங்களிலேயே போராட்டம் தொடரும்” என்றார்.