விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள தனியார் சிமிண்ட் ஆலை யில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விருதுநகர் அருகே தனியார் சிமிண்ட் ஆலையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடை பெற்ற நிகழ்விற்கு. சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உற்பத்தி மையத்தை துவக்கி வைத்தனர்.அப்போது அவர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க இந்த உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு42 முதல் 48 சிலிண்டர்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம்”எனத் தெரிவித்தார். தொடக்கவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசப்பிரமணியன் உட்பட ஆலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.