tamilnadu

img

ஹைப்ரிட் மின்நிலையங்களாக மாறும் பழைய காற்றாலைகள் காற்று, சூரிய ஒளி இரண்டிலும் செயல்படும்

ஹைப்ரிட் மின்நிலையங்களாக மாறும் பழைய காற்றாலைகள் காற்று, சூரிய ஒளி இரண்டிலும் செயல்படும்

தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனம் (TNGE CL) மாநிலத்தின் மேற்கு பகு திகளில் அமைந்துள்ள 110 பழைய காற்றாலைகளை ஹைப்ரிட் (கலப்பு : காற்று-சூரிய) மின்நிலையங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த ஹைப்ரிட் திட்டத்தின் கீழ் பல தசாப் தங்களுக்கு முன்னர் நிறு வப்பட்ட பழைய காற்றாலை கள் இடிக்கப்பட்டு, புதிய கலப்பு மின்நிலையங்க ளுக்கு வழிவகுக்கப்படும் என கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏன் கலப்பு மின்நிலையங்கள்?   சூரிய ஒளி பேனல்கள் பகலில் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. அதேநேரம் காற்றாலைகள் இரவு அல்லது காற்று அதிகமாக இருக்கும் போது சிறப்பாக செயல்படுகின்றன. இவ் விரண்டையும் இணைப்பதன் மூலம், ஹைப்ரிட் மின்நிலை யங்கள் சூரிய ஒளி அல்லது காற்று குறைவாக இருந்தா லும் நிலையான மின்சாரம் வழங்க முடியும். இதை ஊக்குவிக்கவே தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனம் தற்போதுள்ள காற்றாலை களுடன் சூரிய பேனல்களை இணைக்க காற்று மின்சார உற்பத்தியாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.   5 இடங்களில் ஆய்வு இதுதொடர்பாக தமிழ் நாடு பசுமை ஆற்றல் நிறுவன மூத்த அதிகாரி தி நியூ இந்தி யன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில்,”ஹைப்ரிட் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் சுல்தான் பேட்டை, திருப்பூரின் கேத்த னூர், மதுரையின் புலியங் குளம், கன்னியாகுமரியின் முப்பாந்தல் மற்றும் தூத்துக் குடியின் முள்ளக்காடு ஆகிய 5 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த இடங்களில் 1980-90களில் நிறுவப்பட்ட மொத்தம் 47 மெகா வாட்  திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. தனியார் ஆலோசகர்களின் உதவியுடன் நாங்கள் தொ டர்ந்து ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறோம்” என அவர் கூறினார். மற்றொரு அதிகாரி கூறு கையில்,”புதிய ஹைப்ரிட் மின்நிலையங்கள் 22 மெகா வாட் திறன் கொண்ட காற்றா லைகள் மற்றும் 18 மெகா  வாட் மின்சாரம் தரும் சூரிய ஒளி பேனல்கள் ஆகிய வற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இத்திட்டம் பொது-தனியார் கூட்டு முறை (PPP) முன்னெடுக் கப்படும். முதல் கட்டத்தில் மேற்கு மாநிலப் பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். இதற்கு நிர்வாகக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித் துள்ளது. மேலும் விரி வான திட்ட அறிக்கை மாநில அரசுக்கு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது” என அவர் கூறினார். தனியார் முனைவோருடன் ஒப்பந்தம் ஏலம் முடிந்த பிறகு தமிழ் நாடு பசுமை ஆற்றல் நிறுவ னம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மேம்பாட்டாளர்க ளுக்கு நிலத்தை குத்தகை க்கு வழங்கும். இந்த மேம்பாட்டாளர்கள் தங்கள் நிதியில் மின்நிலையங்களை அமைத்து 25 ஆண்டுக ளுக்கு பராமரிப்பு பொ றுப்பை ஏற்பார்கள். தமிழ் நாடு மின்வாரியம் (டிஸ்காம்) இந்த கலப்பு மின் நிலையங்களிலிருந்து மின் சாரத்தை வாங்கும். இந்த  காலக்கெடு முடிந்த பிறகு, முழு வசதியும் தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனத்தி ற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே கடந்த 3 மாதங்களில் அதிக மழை பெற்ற மாவட்டம் நெல்லை

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்க ளில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடி வடைந்தது. ஆனாலும் அதன் பின்ன ரும் கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற் றன. தற்போது கோடை காலமான மார்ச் மாதத்திலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை தொடர்கிறது. இத னால் பொதுமக்கள் வெயிலின் தாக் கத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந் நிலையில் கடந்த 3 மாதங்களில் தென் மாவட்டங்கள் நாட்டிலேயே அதிக மழை யை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜனவரி 1 முதல் மார்ச் 23 வரையிலான காலத்தில் இந்தியாவி லேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டத்தில் பெய்துள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள மாஞ்சோலையை அடுத்த தனத்து எஸ்டேட் பகுதி 1.620 மில்லிமீட்டர் மழை யை பெற்றுள்ளது. அதன் பின்னர் நாலு முக்கு எஸ்டேட்டில் 1,424 மில்லிமீட்டர் மழையும், காக்காச்சியில் 1,225 மில்லி மீட்டர் மழையும் பெற்றுள்ளது. இதனி டையே கடந்த 4 நாட்களாக அந்த பகு திகளில் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்கு அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. திங்கட்கிழமை யன்று 3ஆவது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவ தால் குளிக்க விதித்த தடையை வனத் துறை நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவ தும் கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களின் வெப்ப நிலை தொடர்ந்து இயல்பை விட குறை வாகவே பதிவாகி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராம நாதபுரம் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது.