கன்னியாகுமரி, மீனாட்சிபுரம் பகுதிகளில் 29 ல் மின்தடை
நாகர்கோவில், மே 26-கன்னியாகுமரி, மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் பகுதிகளில் புதன்கிழமை (மே 29) மின்சாரம் நிறுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்நாகர்கோவில் செயற்பொறியாளர் சி.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி, மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 29 ஆம் தேதி (புதன்கிழமை)காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டு பொத்தை,வாரியூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்,மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு,இந்து கல்லூரி, வேதநகர், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் இருந்துமின்சாரம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க பல்க்குகள் மறுப்பு
சுரண்டையில் வாகன ஓட்டிகள் சிரமம்
திருநெல்வேலி, மே 26-சுரண்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த ஒரு வருடமாகவே 10 ரூபாய் நாணயங் களை விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோவைஉள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் வியாபாரிகளும், பஸ்கண்டக்டர்களும், பெட்ரோல்பங்குகளிலும் வாங்க மறுத்துவந்தனர். இதனால் சிரமப் பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் வங்கிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் வங்கிசார்பில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள அறிவிப்பு கொடுத்தும் பல பகுதிகளில் வாங்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லைமாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 1௦ரூபாய் நாணயங்களை வாங்கி வந்த நிலையில் சுரண்டையில் உள்ள சிலபெட்ரோல் பங்க்குகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதுடன். அதற்கான அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர். ஒரு சிலர்மட்டுமே 10 ரூபாய் நாணயங்களை வேறு வழியின்றி வாங்கி வரும் நிலையில் பெட்ரோல் பங்க்குகளே அதிலும் கம் பெனியால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளே வாங்க மறுப்பது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை யின் போது பழைய 500,1000 தாள்களை மாற்ற அரசுபெட்ரோல் பங்க்குகளை பிரதிநிதியாக வைத்திருந்த நிலையில் பெட்ரோல் பங்க்குகள் தற்போது 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது கவலைக்குரியது.இதுகுறித்து பெட்ரோல்பங்க் தரப்பில் விசாரித்தபோது விற்பனை ஆகும் பணத்தை தினமும் வங்கியில் செலுத்துவோம். ஆனால் வங்கிகளில் 10ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் வாங்க முடியவில்லை என்றனர்.பொதுமக்கள் தரப்பில் 10 ரூபாய் நாணய விசயத்தில்அரசும் வங்கியும் தெளிவானவரைமுறையை பிறப்பிக்க வேண்டும் என்றனர். ஆகவே அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது
சுரண்டை பகுதிகளில் குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள்
பருவமழைக்கு முன்னர் அகற்றப்படுமா?
வட்டம் சுரண்டை பகுதிகளில் உள்ள குளங்களில் மண்டிகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாய பணிகளுக்கு மிக முக்கிய அடிப்படை தேவை தண்ணீராகும். ஆகவேதண்ணீரை தேக்கி வைக்க நமது முன்னோர் களும், அரசும் வாய்க்கால்கள், ஓடைகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், அணைகள், தடுப்பணைகள் என கட்டி தண்ணீரை தேக்கி பராமரித்து வந்தனர். ஏற்கனவே கடந்த சில வருடங்களாக பருவ மழை பொய்த்து வரும் நிலையில் நீர் நிலைகள் வற்றி வருகின்றன. இந்நிலையில் தற்போதுபொதுமக்களின் பயன்பாட்டில் பிளாஸ்டிக்பொருட்கள் தவிர்க்க முடியாததாகியுள் ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கேன்சர்போன்ற கொடிய நோய்கள் வரும் என பிரச்சாரம் செய்தும் குறைந்தபாடில்லை.இந்நிலையில் மக்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் நீக்கமற நிறைந்துள்ளது. குளத்து கரையில் உள்ள செடிகள் மற்றும்மணலில் புதைந்துள்ள இவைகள் சாக்கடையில் புரட்டப்பட்டு பார்க்கவே அருவருப் பாக உள்ளது. கடந்த ஆண்டு குளங்களில் மணல் அள்ள தமிழக முதல்வர் அனுமதித்ததால் கூடுதல் தண்ணீர் தேக்கப்பட்டது. விரைவில் பருவ மழை துவங்க உள்ளநிலையில் தற்போது நிறைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீருக்குள் முங்கிநிலத்தடி நீர்மட்டம் உயர்வதை தடுக்கும் சூழலும் உருவாகும் என அஞ்சப்படுகிறது. இவைகள் விளைநிலங்களுக்குள் வந்து விவசாயத்தை தடுக்கும் நிலையும் மேயும்அல்லது தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் பிளாஸ்டிக் கை சாப்பிட்டு இறக்கும் நிலையும் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளின் மேல் நிற்கும் தண்ணீரால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் டெங்கு போன்ற நோய்கள் பரவும் நிலை உள்ளது. ஆகவே மாவட்டநிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்பருவ மழை துவங்கும் முன்பே சுரண்டைமற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை போர்க் கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?