tamilnadu

img

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு- 2026 வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு- 2026 வெளியீடு

சென்னை, மார்ச் 25 - தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) தயாரித்த தேர்தல் கையேட்டினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா  பட்நாயக் புதனன்று (மார்ச் 25) சென்னையில்  வெளியிட்டார். அப்போது பேசிய அர்ச்சனா பட்நாயக், இக்கையேடு தேர்தல் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுவதுடன், பத்திரி கையாளர்களுக்குத் தேவையான அனைத்து முக்கிய தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான தொகுப் பாக உள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் குறித்த அனைத்து புள்ளி  விவரங்களும், புத்தகத்தில் உள்ளது என்றார். தேர்தலில் நூறு சதவிகித வாக்குப் பதிவை உறுதி செய்வதற்காக பல்வேறு  நடவடிக்கைகளை ஆணையம் எடுத்து  வருவதாக தெரிவித்த அவர், சென்னை  போன்ற நகர்ப்புறங்களில் வாக்குப் பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க பல் வேறு சிறப்பு முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும், அதற்கு ஊடகவியலாளர்களும் பங்களிக்க வேண்டும் என்றார். சமூக வலைதளங்களும் தேர்தல்  ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் நடத்தை நெறி முறைகளை மீறுவோர் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இது தொ டர்பான புகார்களை அதற்கான கை பேசி செயலியில் தெரிவிக்க வேண்டும்.  உரிய முறையில் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிஐபி தென் மண்டல தலைமை இயக்கு நர் வை. பழனிச்சாமி, குடவோலை  முறை தொடங்கி தற்போது வரையி லான தேர்தல் குறித்த அனைத்து வர லாற்று தகவல்களையும் உள்ளடக்கிய தாக இந்தப் புத்தகம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக்   கூறினார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்  நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள சூழ லில், சமூக வலை தளங்களில் பரப்பப் படும் பொய் செய்திகளைத் தவிர்த்து அதன் உண்மைத்தன்மையை உறுதி  செய்த பின்னரே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை  தேர்தல் அதிகாரி சிவஞானம், பிஐபி  இயக்குநர் அருண்குமார், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவு இணை இயக்குநர் ஜெய்சிங், அகில இந்திய வானொலி செய்தி பிரிவு  இயக்குநர் சிதம்பரநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.