அனைத்து பட்டியலின மக்களுக்கும் பாரபட்சமின்றி சலுகை-உரிமைகள் வழங்குக!
சென்னை, மார்ச் 25- நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி அனைத்து பட்டியலின மக்களுக்கும் பாரபட்சமின்றி சலுகை கள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை வைத்து உள்ளது. இதுகுறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநில பொதுச் செயலா ளர் பி.செந்தில்குமார் ஆகியோர் விடுத் துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு மதம் மாறிய பட்டியலின மக்கள், பட்டியலின தாய்-தந்தையருக்குப் பிறந்ததன் பேரில் பிறப்பின் போது பட்டியலினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்து, சீக்கியம், பவுத்தம் தவிர்த்த பிற மதங்களுக்கு மாறிய கணத்திலேயே பட்டியலின தகுதியை இழந்து விடுவதாகவும், எனவே அப்படி மதம் மாறியவர்களுக்கு பட்டியலினத் தவருக்கான எவ்வித உரிமையோ, சலு கையோ கிடையாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இத்தீர்ப்பு அரசியல் சட்டம் (பட்டிய லினத்தோர்) ஆணை 1950, பிரிவு 3- இன்படி வழங்கப்பட்டுள்ளது. 1950-இல் இந்து மதம் மட்டுமே என இருந்த நிலை யில் அப்பட்டியலில் 1956-இல் சீக்கிய மதமும், 1990-இல் பவுத்த மதமும் இணைக்கப்பட்டன. அதன்படி இந்து, சீக்கிய, பவுத்த மதங்களைச் சார்ந்த வர்கள் மட்டுமே பட்டியலினத்தவர் என சான்றிதழ் பெற இயலும். அவர்களுக்கு மட்டும் பட்டியலினத்தவருக்கான உரி மைகளும், சலுகைகளும் கிடைக்கும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங் களுக்கு மாறிய பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்கு மறுக்கப்படுவது தொடரும். பட்டியலினத்தைச் சார்ந்த மக்கள் இந்த மதங்களுக்கு மாறினாலும் சமூகத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் களாகவே நடத்தப்படுவதும், தீண்டா மைக்கு உட்படுத்தப்படுவதும் நிதர்சன மான உண்மையாக இருந்தாலும் அதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளா தது வருத்தத்திற்குரியது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை இடதுசாரிகள் ஆதரவுடன் மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோது, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமி ஷன் முழுமையான தரவுகள் அனைத் தையும் ஆய்வு செய்த பின்னர் கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறி னாலும் பட்டியலினத்தில் பிறந்த மக்க ளுக்கு இந்து, சீக்கிய, பவுத்த மதங் களைச் சார்ந்தவர்களைப் போன்று பட்டியலினத்தவர்களாகக் கருதப்பட்டு பட்டியலினத்தவர்களுக்கான சலுகை களும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் அந்த பரிந்துரைகள் கடந்த 16 ஆண்டுகளாக ஏற்கப்பட்டு, அம லாக்கப்படாததாலேயே உச்சநீதி மன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கி யுள்ளது. எனவே ஒன்றிய அரசாங்கம் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைப்படி அரசியல் சட்டம் (பட்டி யலினங்கள்) ஆணை பிரிவு 3-இல் இந்து, சீக்கியம், பவுத்தம் ஆகிய பட்டிய லுடன் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களையும் இணைத்து அனைத்து பட்டியலின மக்களுக்கும் பாரபட்ச மின்றி சலுகைகளும், உரிமைகளும் வழங்க ஆவன செய்யுமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.