tamilnadu

img

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

சென்னை,நவ.21- தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச் சர் சி.வி.கணேசன் கூறினார். ஸ்ரீபெரும்புதூர், ஹூண்டாய் நிறுவனத் தில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயர மான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நவம்பர் 21 அன்று நடைபெற்றது. தொழிலாளர் நலன் -திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலக பாதுகாப்பு-சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யை துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.  இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகை யில், தொழிலாளர்களின் பாது காப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் மூலம் 1,844 பயிற்சி வகுப்புகள் 98,245 தொழிலாளர் களுக்கு பயிற்சி வழங்கி யுள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை கணக்கீட்டின்படி 2022-23 ஆண்டில் இந்தியாவில் 18,49,492 தொழிலாளர்கள் உள்ள னர். அதில் முதலிடம் தமிழ்நாடு ஆகும். ஏறக்குறைய 15 சதவீதம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆவர்.  அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு  மற்றும் சுகாதார இயக்ககத்தின் முயற்சியினால் இந்த ஆண்டு நடை பெற்ற தீபாவளி பண்டிகையின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருந்தது எனவும், தொழிலாளர்கள் உயிர் விலை மதிக்க முடியாதது. தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.