tamilnadu

img

மதுரை ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கத்திற்கு முடிவு!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பழைய இராமநாதபுரம் ஆட்சியரக கட்டிடப் பகுதியையும், அண்ணா பேருந்து நிலைய பகுதியையும் வகைமாற்றம் செய்து ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை துவக்க முடிவெடுக்கப்பட்டது. 
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணைத்தலைவர் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், தேனி எம்.பி தங்கத் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மதுரை மாநகராட்சி பிரச்சனைகள் மற்றும் மதுரை மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பழைய இராமநாதபுரம் ஆட்சியரக கட்டிடப் பகுதியையும், அண்ணா பேருந்து நிலைய பகுதியையும் வகைமாற்றம் செய்து ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை துவக்க முடிவெடுக்கப்பட்டது. இது ராஜாஜி மருத்துவமனை சந்தித்திக்கொண்டிருக்கும் கடுமையான இடநெருக்கடிக்கான தீர்வாக அமையும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.