கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் அவசியம் என்ற நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை தொடரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதியில் 6,000 வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், 5 லிட்டருக்குக் குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளன.