tamilnadu

img

மதுரை தீ விபத்தின் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

மதுரை, செப்.17- தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
 கடந்த 12ஆம் தேதி மதுரையில் உள்ள விசாகா தனியார் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 இந்நிலையில் 3 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 
சட்டவிரோதமாக மகளிர் தங்கும் விடுதி நடத்திய வழக்கில் விடுதியின் உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளனர்.