மதுரை, செப்.11- மதுரை விமான நிலையத்தில் இரவு நேரமும் விமானங்களை இயக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது இரவு நேரமும் விமானங்களை இயக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம்(AAI) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து தனியார் விமான நிறுவனங்களுக்கு இரவு நேரத்தில் விமானங்களை இயக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பாதுகாப்புப் பணிக்குக் கூடுதல் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.