tamilnadu

எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் குழு வருகை

சென்னை, ஜூன் 7- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளை ஆய்வு செய்ய ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவ னத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு  தமிழகம் வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள  யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிகுலேசன் பள்ளியில், உலக உணவு பாது காப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை  வெள்ளிக்கிழமை (ஜூன் 7) தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவப் படிப்பிற்கான  விண்ணப்பங்களை 2 மணி நேரத்தில்  500 பேர் பதிவிறக்கம் செய்துள்ள தாகக் கூறினார். சித்த மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்து வது குறித்து இன்னும் இறுதி முடிவு  எடுக்கப்படவில்லை என்றும் தெரி வித்தார்.