tamilnadu

img

அரசியல் திருப்புமுனைகளை உருவாக்கிய திமுகவின் பவள விழா சிறக்கட்டும்!

காஞ்சிபுரத்தில் செப்.28 அன்று நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை நிகழ்த்தினார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில், அமைச்சர் தா.மு.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஐ.யு.எம்.எல் தலைவர் கே.எம். காதர் முகைதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மௌரியா, மமக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல் ராஜன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ், ஆதித் தமிழர் பேரவை தலைவர் க.அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வேர்டு பிளாக் தலைவர் பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். 

கட்சி தொடங்கி 75 ஆண்டுகளை கடக்கும் திமுக, பலமுறை ஏற்றத் தையும் சில முறை இறக்கத்தையும் சந்தித்திருக்கிறது. ஏராளமான அடக்கு முறைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டு தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் அரசி யல் திருப்பங்களை ஏற்படுத்திய பெரு மையும் அந்தக் கட்சிக்கும் அதன் தலை வர்களுக்கும் எப்போதும் உண்டு. அதில் முதலில் நிற்பவர் அண்ணா. நாடு விடுதலை பெற்று, 1967க்கு  முன்பு வரை காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் கோ லோச்சி இருந்த காலம். அன்றைக்கு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று பல கட்சிகள் போராட் டம் நடத்தி வந்தன. அதில் வெற்றி பெற்றது திமுக தான்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் எதிரும் புதிரும் ஆக இருந்த ராஜாஜியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரே மேடையில் அமர வைத்து கூட்டணி  ஒற்றுமையை ஏற்படுத்திய பெருமை அண்ணாவுக்கு உண்டு. அந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்ப டுத்தி இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை தந்தது. 1975 ஆம் ஆண்டு, நாடு முழுக்க  அவசர நிலை பிரகடனம் (எமர்ஜென்சி) கொண்டு வரப்பட்டது.  எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் பலரும் சிறையில்  அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது மிசா சட்டமும் பாய்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி யினர் தலைமறைவாக வாழ வேண்டிய  சூழலும் உருவானது. அன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் ஜனநாய கம் வேண்டுமா? வேண்டாமா? என்கிற  மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அத்த கைய சூழ்நிலையில் ஜனநாயகம் தான்  வேண்டும் என்று தீர்மானத்தைக் கொண்டு  வந்ததால் திமுக ஆட்சியை இழந்தது. 1977 ஆம் ஆண்டில் நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கும் எதிர்கட்சிகள் சிதறிக் கிடந்தன. அப்போது ஜனநாயகத்தை விரும்பும் தலைவர்கள் அனைவரும் ஒரு அணியில் சேர வேண்டும் என்று  முயற்சிகள் நடந்தது. அந்த முயற்சியில்  முக்கிய பாத்திரம் வகித்தவர் திமுக தலைவர் கலைஞர். தேர்தல் முடிவுகள் நாடு முழுக்க எதிர்க்கட்சிகளுக்கு சாதக மாக அமைந்தது. எமர்ஜென்சி தூக்கி எறியப்பட்டது. ஜனநாயகம் மீண்டும் மலர்ந்தது. 

எதிர்க்கட்சிகள் சிதறுண்டதால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 ஆம்  ஆண்டில் பாசிச வெறி பிடித்த பாஜக வின் மதவெறி ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தது. அன்றைய தினத்தி லிருந்து இந்தி- சமஸ்கிருதம் திணிப்பு,  ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேர்தல் என்ற  ஒற்றை கலாச்சாரத்தை நோக்கி இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் ஆட்சி நீடித்துக் கொண்டி ருக்கிறது. இந்த பின்னணியில்தான் 2019 ஆம்  ஆண்டில், தமிழ்நாட்டில் பாஜகவை எந்த சூழ்நிலையிலும் உள்ளே நுழைய விடமாட்டோம் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கி னார் இன்றைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அவரது தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 மக்க ளவைத் தொகுதிகளில் 39 தொகுதி களை கைப்பற்றி மகத்தான சாதனை  படைத்து இந்தியாவுக்கே வழிகாட்டி யது.

அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்  தேர்தல் என அனைத்து தேர்தல்களி லும் இந்த கூட்டணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில்,  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்தி களை ஒன்றிணைக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. அதன்படி உருவான ‘இந்தியா கூட்டணிக்கு முதன் முதலில் விதை  போட்டது தமிழ்நாடு. அந்த கூட்ட ணிக்கு தமிழ்நாட்டில் தலைமையேற்ற வர் இன்றைய முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளையும் முழு மையாக கைப்பற்றி நாட்டுக்கே வழி காட்டியது மட்டுமல்ல, திருப்பு முனையை உருவாக்கிக் காட்டினார்  மு.க.ஸ்டாலின். இந்த வெற்றியின் மூலம் பாஜக அறுதிப் பெரும்பான் மையை இழந்தது. கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. இன்றைக்கு ஒன்றிய மோடி அரசு  கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப்  புதைக்கிறது. சமூக நீதியை சவக் குழிக்கு அனுப்ப முயற்சிக்கிறது. இந்த  நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் மேலும் வலுவான ஒற்றுமையுடன் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவதை நோக்கி உறுதியாக செயல்பட வேண்டிய கடமை உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் திமுக வுக்கும், அதன் தலைவருக்கும் முக்கி யப் பங்கு உண்டு. அந்தப் போராட் டத்தை அனைவரும் ஒன்றிணைந்து உறுதியோடு தொடர்வோம்! இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசி யல் திருப்புமுனைகளில் திமுக மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அத்த கைய கட்சியின் பவள விழா சிறக்கட்டும்;  வெல்லட்டும்!