இன்றைக்கும் துல்லியமாக
பொருந்தும் லெனினின் படைப்பு
இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” எனும் லெனினின் படைப்பு காலம் கடந்து இன்றைக்கும் பொருத்தப்பாடு உடைய நூல் ஆகும். புரட்சி இயக்கம் உலக மெங்கும் சந்திக்கும் ஒரு திரிபு, இடதுசாரி சீர்குலைவுவாதம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும் இடதுசாரி சீர்குலைவு வாதத்தை சந்தித்துதான் தனது சித்தாந்தக் கோட்பாடை சரியென நிரூபித்துள் ளது. எனவே இந்த நூலை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கற்பது மிக அவசியமாகிறது. ஏன் இந்த நூலை லெனின் எழுதினார்? லெனின் இந்த நூலை 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதினார். இந்த நூல் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. அதில் பங்கேற்க வந்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் இந்த ஆவணம் வழங்கப்பட்டது. ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வளர்ந்த தேசங்களில் புரட்சி வென்றால் அது ரஷ்ய சோசலிச புரட்சிக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கும் என லெனின் மதிப்பிட்டார். அத்த கைய சூழல் ஜெர்மனியில் இருந்தது. மேலும் ஹாலந்து/ ஆஸ்திரியா/ இத்தாலி போன்ற நாடுகளில் புரட்சி இயக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் புரட்சிக்கான சூழல் உருவாகும் பொழுதுதான் இந்த தேசங்களில் இடது சீர்குலை வுவாதமும் முன்னுக்கு வந்தது. எனவே இந்த சீர்குலைவு திரி புவாதத்தை எதிர்த்து சித்தாந்த போராட்டம் நடத்த வேண்டிய தேவை லெனினுக்கு ஏற்பட்டது. புரட்சி யின் தொடக்ககால பணி சுமைகள் ஏராளமாக இருந்த பொழுதும் இந்த நூலை லெனின் எழுதினார். இடதுசாரி சீர்குலைவுவாதிகள் முன்வத்த கீழ்கண்ட தவறான கோட்பாடுகளை லெனின் மிக கடுமையாக விமர்சித்தார்: • நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டு கள் பங்கேற்பது தேவை இல்லை. •
தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புகளில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது வீண் வேலை. • தனிமனித படுகொலைகள் நியாயமே! • விதிவிலக்கின்றி சமரசம் எப்பொழு தும் எந்த வடிவத்திலும் கூடாது. இத்தகைய நிலையைத்தான் உலகமெங்கும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் இடது சீர்குலைவுவாதிகள் முன்னெடுத்த னர். லெனின் இத்தகைய அபத்த மான கருத்துக்களுக்குதான் மேற்கண்ட நூலில் பதில் தருகிறார். நாடாளுமன்றமும் கம்யூனிஸ்டுகளும் 1905 ஆம் ஆண்டு ரஷ்ய நாடாளு மன்றமான “டூமாவை” புறக் கணித்தது சரியே என கூறும் லெனின் 1906 ஆம் ஆண்டு இத்தகைய புறக்கணிப்பு தவறு எனவும் ஆனால் இந்த தவறு சிறிய அளவில் தான் இருந்தது எனவும் குறிப்பிடு கிறார். ஆனால் 1907-08 ஆண்டு களிலும் அதற்கு பின்னரும் இந்த புறக்கணிப்பு தொடர்ந்திருந்தால் மிகப்பெரிய தவறாக மாறியிருக்கும் எனவும் குறிப்பிடுகிறார். 1905 ஆம் ஆண்டு புறக்கணிப்பு சரி எனவும் பின்னர் அது தவறு எனவும் ஏன் லெனின் குறிப்பிடுகிறார்? ஏனெனில் 1905 ஆம் ஆண்டு ரஷ்ய முதல் புரட்சி இயக்கம் வீறு கொண்டு எழுந்திருந்தது; தொழிலா ளர்கள் நடத்திய வேலை நிறுத்தங் கள் அரசியல் வேலைநிறுத்தங் களாக மாறி புரட்சி எழுச்சியாக பரிண மித்திருந்தது. அந்த சமயத்தில் இந்த புரட்சி இயக்கத்தை திசை திருப்பவும் மட்டுப்படுத்தவும் ஜார் மன்னர் டூமாவை கூட்டினார். எனவே ரஷ்ய கம்யூனிஸ்டுகள் டூமா புறக்கணிப்புக்கு அறைகூவல் விடுத்தனர். ஆனால் 1906 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் புரட்சி தோல்வி அடைந்தது; பொது வாக மந்தமான சூழல் நிலவியது. அப்பொழுது நாடாளுமன்றங்களில் பணியாற்றுவது கம்யூனிஸ்டு களுக்கு தேவையாக இருந்தது.
லெனின் குறிப்பிடுகிறார்: “1905ம் ஆண்டு நாடாளுமன்ற புறக்கணிப்பு சரியென நிரூபிக்கப் பட்டது; அதற்கு காரணம் எப்பொழு துமே புறக்கணிப்பு சரி என்ற அடிப்படையில் அல்ல; அப்பொழுது புரட்சிக்கான எழுச்சி உருவாகி விட்டது என்பதை நாம் சரியாக மதிப் பிட்டோம். எனவே இது சரியான முடிவு. ஆனால் அத்தகைய சூழல் இல்லை எனும் பொழுது இந்த புறக்கணிப்பு முடிவு சரியென்பதாக இருக்காது” நாடாளுமன்ற புறக்கணிப்பு எனும் அனுபவத்தை “மற்ற சூழல்களுக்கும் மற்ற நிலைமை களுக்கும் விமர்சனமின்றி பொருத்து வது பெரிய தவறு” என லெனின் வலுவாக குறிப்பிடுகிறார். (பக்:23). மேலும் லெனின் குறிப்பிடுகிறார்; “1908-14 காலகட்டத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான நாடாளு மன்றங்களிலும் பிற்போக்குத்தன மான சட்டங்களால் உருவாக்கப்பட்ட ஏனைய அமைப்புகளிலும் பங்கே ற்பதை கட்டாயமாக ஆக்காமல் இருந்திருந்தால் போல்ஷ்விக்குகள் புரட்சிகரமான கட்சியின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்துக் கூட இருக்க முடியாது.” (பக்:23) “மிகவும் பிற்போக்குத்தனமான நாடாளுமன்றங்களில் பங்கேற்க வேண்டிய தேவையை வறட்டுத்தன மாக மறுத்த காரணத்தால் 1908 ஆம் ஆண்டு இடது சீர்குலைவு போல்ஷ்விக்குகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்”(பக்:22) நாடாளுமன்ற பிரமை தவறு உழைக்கும் மக்களில் ஒரு சிறு பகுதியினர் நாடாளுமன்ற முறையின் மீது பிரமை கொண்டி ருந்தாலும் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை நாடாளு மன்றத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்க வேண்டும் என லெனின் வலியுறுத்துகிறார். அதே சமயத்தில் கம்யூனிஸ்டு களுக்கு நாடாளுமன்ற பிரமை இருக்கக் கூடாது என்பதும் அவசியம். தொழிற்சங்கங்களில் பணியாற்றுவது வீண் வேலையா?
தொழிற்சங்கங்களில் பணியாற்றுவது தவறு என இடது சீர்குலைவுவாதிகள் கூறுவதையும் லெனின் கடுமையாக சாடுகிறார். அத்தகைய கருத்து கேலிக் கூத்தானது எனவும் சிறுபிள்ளைத் தனமானது எனவும் வாய்ச்சவடால் எனவும் விமர்சிக்கிறார். தொழிற்சங்கங்களில் பணியாற்ற வேண்டியதில்லை எனும் கருத்தை மேற்கத்திய இடது சீர்குலைவு வாதிகள் மட்டுமல்ல; இந்திய சீர்குலைவுவாதிகளும் கூறினர். இத்தகைய கருத்துகளை லெனின் கடுமையாக விமர்சிக்கிறார்: “பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களில் பணியாற்ற மறுப்பது என்பதன் பொருள் என்னவெனில் பிற்போக்குத்தன மான அல்லது முதலாளித்துவ ஏஜெண்டுகளாக உள்ள அல்லது சிந்தனை மாறிய கனவான்களாக உள்ள தொழிலாளர் தலைவர் கள் அல்லது முற்றிலும் முதலாளித்துவ வாதிகளாக மாறிய தொழிலாளர்களின் செல்வாக்கில் போதுமான அரசியல் உணர்வு பெற்றிருக்காத பின் தங்கிய தொழி லாளர்களை விட்டுவிடுவது என்பதாகும். ஆனால் இது மிகவும் அபத்தமானது” (பக்:43) மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் பணி யாற்ற வேண்டியது கம்யூனிஸ்டு களின் கடமை எனச் சொல்கிறார் லெனின். மிக மிக பிற்போக்குத்தன மான அமைப்புகள் அல்லது சங்கங்களாக இருந்தாலும் அங்கு தொழிலாளர்களோ அல்லது ஏனைய உழைப்பாளிகளோ இருந்தால் அவர்களை வென் றெடுக்க கம்யூனிஸ்டுகள் அங்கு செயல்பட வேண்டும். எவ்வளவு பின் தங்கிய உணர்வு படைத்த உழைப்பாளிகளாக இருந்தாலும் அவர்களிடையே கம்யூனிஸ்டுகள் பணியாற்றி அவர்களை வென் றெடுக்க வேண்டும். மாறாக தமக்கு தாமே ஒரு வேலியை போட்டுக்கொண்டு உழைப்பாளி களை தள்ளி வைக்க கூடாது என லெனின் அறிவுறுத்துகிறார்.
தனிநபர் பயங்கரவாதம் தனிநபர் பயங்கரவாதம் இடது சீர்குலைவுவாதிகள் முன்வைக்கும் இன்னொரு தவறான கருத்து ஆகும். ஆனால் இத்தகைய நடைமுறை களை எப்பொழுதும் மார்க்சிய-லெனினியம் அங்கீகரித்தது இல்லை. உழைக்கும் மக்கள் போராட்டங்கள்தான் எதிரி வர்க்க அரசியலை அழிக்கும். தனி நபர் பயங்கரவாதம் அல்ல. இது பற்றியும் லெனின் விளக்கியுள்ளார். இவ்வாறாக இடது சீர்குலைவு திரிபுவாதத்தை லெனின் ஆணித்தர மாக அம்பலப்படுத்துகிறார். இந்த நூல் கம்யூனிஸ்டுகள் கற்க வேண்டிய மிக முக்கிய சித்தாந்த ஆவணம் எனில் மிகை அல்ல.