tamilnadu

பாதுகாப்பான மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு முதலிடம்

பாதுகாப்பான மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு முதலிடம்

இந்திய மாநிலங்களின் செயல்பாடு கள் தொடர்பாக இந்தியா டுடே நிறு வனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. பொதுமக்களின் செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு, ஜாதி-மதம்- இனத்தின் பெயரிலான பாகுபாடு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், முன்னேறிய மாநிலங்களில் பட்டியலில் முதல் 2 இடங்களில் கேரளம், தமிழ்நாடு இடம் பெற்றுள்ளன. பின் தங்கிய மாநிலங்களின் பட்டிய லில் கடைசி இடங்களில் உத்தரப்பிர தேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்  ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்தியா டுடே நிறுவனம், 21 மாநி லங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் மொத்தம் 98 மாவட்டங்களில் 9,188 பேரி டம் பல்வேறு பிரிவுகளின் 30 கேள்வி களை பொதுமக்களிடம் முன்வைத்தது. இதில், அனைத்து பிரிவுகளிலும் முன்னேறிய மாநிலங்களின் தரவரிசை யில், கேரளம் முதலிடத்தையும், தமிழ்  நாடு இரண்டாமிடத்தையும், மேற்கு வங் கம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. மகாராஷ்டிரா, ஒடிசா, இமாசலப்பிர தேசம், ஹரியானா, உத்தரகண்ட், சண்டி கர், தில்லி ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. இதில், நாட்டிலேயே மிக மோச மான மாநிலமாக (22-ஆவது) இடம் பெற்றி ருப்பது பாஜக உத்தரப்பிரதேசம்தான். மேலும், 22 மாநிலங்களில் பாஜக ஆளும்  மத்தியப்பிரதேசம் 19-ஆவது இடத்தை யும், குஜராத் 21-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. பாகுபாடு குறைவான மாநிலங்களி லும் 1. கேரளா 2. தமிழ்நாடு 3. மேற்கு வங்கம் ஆகியவையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. பொதுபாதுகாப்பு மிகுந்த மாநி லங்களுக்கான தரவரிசையில் கேரளம் முதலிடத்தையும், உத்தரகண்ட் இரண்  டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாமி டத்தையும் பெற்றுள்ளன.