tamilnadu

img

அரசுத்துறையில் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்புக!

சென்னை, செப்.10- அரசுத்துறையில் காலியாக உள்ள 4.5லட்சம் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  ஜாக்டோ -ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஜாக்டோ – ஜியோவின் ஆசிரி யர், அரசு ஊழியர், அரசுப் பணியா ளர் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் சனிக் கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளருமான கு.தியாகராஜன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாநாட்டில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார். உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் ஆ.செல்வம் (தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம்), ஆ.ஆறுமுகம் (தமி ழகத் தமிழாசிரியர் கழகம்), அ.மாய வன் (தமிழ்நாடு உயர்நிலை மேல்  நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்), ப.குமார் (தமிழ்நாடு அரசுப்  பணியாளர் சங்கம்), செ.முத்துசாமி (தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி), ச. மயில் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), இரா.தாஸ் (தமி ழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி), அ.வின்சென்ட் பால்ராஜ் (தமி ழக ஆசிரியர் கூட்டணி), ஆர்.பெரு மாள்சாமி (தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகம்), ஜெ.காந்தி ராஜ் (கல்லூரி ஆசிரியர் கூட்டு நட வடிக்கை குழு), கு.தியாகராஜன் (தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்), சி.சேகர் (தமிழ்நாடு தொடக்க  நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசி ரியர் சங்கம்), எஸ்.சங்கரப்பெரு மாள் (தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரி யர், உடற்கல்வி இயக்குநர் சங்கம்), கி.மகேந்திரன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), பொன்.செல்வ ராஜ் (தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்) கு.வெங்கடேசன் (தலைமை  செயலகம்) வி.எஸ்.முத்துராமசாமி (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி), நா.சண்முகநாதன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்றம்), இலா.தியோடர் ராபின் சன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

தீர்மானங்கள் 

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு  திரும்பப் பெற வேண்டும், தேசியக் கல்  விக் கொள்கை 2020ஐ திரும்பப் பெற  வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்  டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழ கத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சத்துக்கும் மேற்  பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  அதிமுக அரசு பிறப்பித்த ஆதி சேஷைய்யா தலைமையிலான பணியா ளர் சீரமைப்பு குழுவினை முற்றிலுமாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,  அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக் கைகளை கைவிட வேண்டும், தமிழக  அரசின் புள்ளிவிவரங்களை முற்றிலு மாக தனியார்வசம் ஒப்படைக்கும் இந்த  ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும், சத்துணவு மைய அமைப்பா ளர்கள், சமையலர்கள், உதவியா ளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சமூகவனப் பாதுகாவலர்கள், வேளாண்  மைத் துறையில் பணிபுரியும் பண்ணை ஊழியர்கள் போன்ற பல்வேறு நிலை களில் பணியமர்த்தப்படும் அனைத்து  நிலை ஊழியர்களுக்கும் வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும் புதிய  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை காப்பீட்டு நிறுவனம் மூலம் நடத்துவ தற்கு பதிலாக தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடை பெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரை யும் வெகுவாகக் கவர்ந்தன.