பெ. சண்முகம் கண்டனம் சென்னை, ஜன. 17 - வன உரிமைச் சட்டம் - 2006 வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை மறுக்கும் வகையில், தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் கண்டனம் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு வனத் துறையின் சார்பில், முண்டந்துறை வனச்சரக அலுவலர், அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “சென்னை உயர் நீதிமன்றம் W.P.(MD).No.8466 of 2020 and W.M.P. (MD) No. 7852 of 2024 - 04.03.2022 நாளது தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளபடி களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உள்ளே கால்நடைகள் நுழை வது, மேய்ப்பது, வளர்ப்பது வன உயிரி னப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி தடை செய்யப்பட்ட குற்றச் செயலாகும்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “கால்நடைகள் வைத்திருப் போர் உடனடியாக 20.01.2025-ஆம் தேதிக் குள் வெளியேற்ற வேண்டும். தவறும்பட்சத் தில் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 27(4) மற்றும் 35(7)-இன் படி, கால் நடைகள் வைத்திருப்போர் மீது வனக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கால்நடைகள் கைப்பற்றப்படும்” என்று மிரட்டல் விடுத்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “வனத் துறையின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது” என்று தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு வனத்துறையின் இந்த அறிவிப்பு, வன உரிமைச் சட்டம் - 2006 வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை மறுப்பதாக உள்ளது” என்று, தமது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப் பிட்டுள்ள பெ. சண்முகம், “புலிகள் சரணால யத்திற்கும் வன உரிமைச் சட்டம் பொருந் தும்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “இந்தப் பிரச்சனையில் தலை யிட்டு அறிவிப்பைத் திரும்பப்பெறவும், மக்களின் சட்ட உரிமையைப் பாதுகாக்க வும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.