tamilnadu

img

அந்நிய நேரடி முதலீட்டை கைவிட வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அந்நிய நேரடி முதலீட்டை கைவிட வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் முடிவினை உடனடி யாக கைவிட வேண்டும் என கோ வையில் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சனியன்று நடைபெற்ற மாநில கருத்தரங்கம் வலியுறுத்தி உள்ளது.  தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வட கோவை குஜராத்தி சமாஜத்தில் தமிழ் மாநில கருத்தரங்கம் நடை பெற்றது‌. தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணைச் செயலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். ஐசிஇயு கோவை பொதுச் செயலாளர் கே. துளசிதரன் வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமி நாதன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜி. ஆனந்த் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை உயர்த் தும் ஒன்றிய அரசின் முடிவை உடன டியாக கைவிட வேண்டும்.  

பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்க ளை தனியார் மயமாக்கக் கூடாது.  இன்சூரன்ஸ் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத் தலைவர் செ.முத்துக் குமாரசுவாமி எழுதிய இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு கழுகுகளும், கோழி குஞ்சுகளும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பு துணைத் தலைவர் பி.பி.கிருஷ்ணன் நூலினை வெளி யிட, பொருளாளர் எஸ்.சிவசுப்பிர மணியன் பெற்றுக்கொண்டார்.  இக்கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலிமிருந்து எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திரளானோர் பங் கேற்றனர். முடிவில்தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணைச் செயலாளர், எஸ்.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.