“இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது”
இந்தியா கூட்டணி மிகவும் வலு வாக உள்ளது என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அதே சம யத்தில் பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. மற்றபடி இந்தியா கூட்டணிக்குள் எந்தப் பிரச்ச னையும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியது போல, இந்தியா என்பது ஒரு தேசிய கூட்டணி. தேசிய தேர்தல்களின் போது கூட்டணி அப்படியே இருக்கும். ஆனால் மாநில அளவில் கூட்டணி வேறு மாதிரி இருக் கும். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவிருக்கும் தேர்தலில் தனி யாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து எந்த கருத்தும் கூற முடி யாது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சி கள் தங்களுக்குள் முடிவு செய்வார்கள். அதாவது ஒன்றாக அமர்ந்து முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிப்பார்கள்” என அவர் கூறினார்.