மதுரை,அக்.03- முறையாக கடன் உதவி வழங்காத இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையினை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமைத்து சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் வன்னிவேலம் பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு, டி.கல்லுப்பட்டியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை முறையாக கடன் உதவி வழங்குவதில்லை. எனவே, வன்னி வேலம்பட்டி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடன் வழங்காமல் இழுத்தடிப்பதை நிறுத்த வேண்டும். புதுவாழ்வு திட்டத்தில் கடன் வழங்கியதில் 18 கோடி ரூபாய் ஊழல் நடவடிக்கையை துரிதபடுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கியின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், ஊர் மக்கள் இணைந்து சமைத்து சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, வங்கி மேலாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பபடாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.