tamilnadu

img

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காஞ்சிபுரம், ஆக. 13- அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி.க்  கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் முறை யான ‘பாஸ்’ இல்லாமல் சிலரை உள்ளே  செல்ல அனுமதித்து இருந்தார். அந்த நேரத்  தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா இதனை கண்டு பிடித்தார். இதனால் ஆவேசமான ஆட்சியர், சம்பந்  தப்பட்ட காவல் ஆய்வாளரை கண்டித்து கடுமையாக பேசினார். இந்த வீடியோ காட்சி  சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை  ஏற்படுத்தியது. கலெக்டர் பற்றி விமர் சனமும் எழுந்தது. இந்நிலையில் காவல் ஆய்வாளரை திட்டியது குறித்து பதிலளிக்குமாறு காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை  ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொதுமக்கள், காவலர்கள் முன் ஆய்  வாளரை திட்டியது மனித உரிமை மீறல்  ஆகாதா? என நோட்டீசில் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் மீது எடுக்கப்  பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேட்டுள்  ளது. அத்துடன் ஆட்சியர் மீதான நடவ டிக்கை குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.