india

img

போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை.... மனித உரிமை ஆணையம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்.....

புதுதில்லி:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் 9 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின்போராட்டம் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று ஒன்றிய, மாநிலஅரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள் ளனர். அண்மையில் ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது அந்த மாநில போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் விவசாயி கஜால் உயிரிழந்தார். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும், தில்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட் டுள்ளது.