tamilnadu

img

யுபிஐ மூலம் ஏ.டி.எம்-இல் பணம் டெபாசிட் செய்வது எப்படி?

யுபிஐ மூலம் ஏ.டி.எம்-இல் பணம் டெபாசிட் செய்வது எப்படி?

டெபிட் கார்டு (Debit card) இல்லாமல் யு.பி.ஐ மூலம் ஏ.டி.எம்-இல் பணம் டெபாசிட் (Depo sit) செய்யும் யு.பி.ஐ-ஐ.சி.டி (UPI Interoperable Cash Deposit) வசதியை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். 1) யு.பி.ஐ பரிவர்த்தனைகள் செய்யும் வகையில் இருக்கும் ஏ.டி.எம்-இல் UPI Cash Deposit என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். 2) பின்னர் ஏ.டி.எம் மெஷினில் வரும் QR குறியீட்டை UPI ஆப்பில் ஸ்கேன் செய்யவும். 3) பின்பு நீங்கள் டெபாசிட் செய்யும்  தொகையை ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ளீடு செய்தால், அதே தொகை UPI ஆப்பில் காண்பிக்கிறதா என சரி பார்க்க வேண்டும். 4) இதை அடுத்து, UPI ஆப்பில் உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து, யுபிஐ பின்னை (UPI Pin) கொடுத்தால், பணம் டெபாசிட் ஆகி விடும்.

கூகுள் பிளே ஸ்டோரில் ஒரே நேரத்தில்  3 செயலிகளை அப்டேட் செய்யலாம்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பயனர்களை ஒரே நேரத்தில்  3 ஆண்ட்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் மற்றும்  அப்டேட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் 2 செயலிகளை பதிவிறக்கம் செய்யும்  வகையில் புதிய செயலியை கூகுள் நிறுவனம் வெளி யிட்டிருந்தது. ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோருக்கான அப்டேட் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், கூகுள்  நிறுவனம் ‘ஆப் ஆட்டோ ஓபன்’ (App Auto Open) என்ற அம்சத்தையும் உருவாக்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம், ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து  இன்ஸ்டால் செய்யப்பட்ட உடனேயே, அந்த செயலி தானாகவே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ உடன் வாய்ஸ் சாட் வசதி!

வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் வாய்ஸ் சாட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று WABetainfo அறிக்கை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே சாட் செய்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 2.24.18.18க்கான வாட்ஸ்அப் பீட்டாவில், மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் வாய்ஸ் சாட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.