tamilnadu

img

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை அகற்ற மலைவாழ் மக்கள் எதிர்ப்பு!

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை  அகற்ற மலைவாழ் மக்கள் எதிர்ப்பு!

திருவள்ளூர், ஜூலை 16- வாழவந்தான் கோட்டை யில்,  இருளர் இன மக்களின்  சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களின் சமாதிகளை அகற்றிய ஜேசிபி இயந் திரத்தை தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள வாழவந்தான் கோட்டையில் இருளர் இனத்தை சேர்ந்த 75  குடும்பங்கள் பல தலை முறைகளாக வாழ்ந்து வரு கின்றனர். இங்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்  துவங்கிய பிறகு, தொடர்  போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் குடிமனை  பட்டா, மின் இணைப்பு பெற்று கொடுத்தனர். தற்போது 19 குடும்பங்க ளுக்கு பிரதம மந்திரி ஜன்  ஜன்மன் திட்டத்தில் மூலம்  தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டு பணிகள் நிறைவடை யும் நிலையில் உள்ளது. மலைவாழ் மக்கள் சங்கத் தின் போராட்டத்தால் பட்டா  பெற்று தொகுப்பு வீடுகள் கட்டும் அளவிற்கு சற்று  முன்னேற்றம் கண்டுள்ள னர்.  ஜேசிபி முற்றுகை  இந்த நிலையில் வாழ வந்தான்கோட்டை  அருகில்  உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சுடுகாடாக இருளர்  இன மக்கள்  பல ஆண்டு களாக  பயன்படுத்தி வரு கின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. புதனன்று (ஜூலை 16), ஜேசிபி இயந்திரம் மூலம்  இந்த இடத்தில் புதைக்கப் பட்ட சமாதிகளை வருவாய்த் துறையினர் அகற்றினர். இது குறித்து தகவல் அறிந்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய செயலாளர் கே.முருகன், சிபிஎம் திருவள்ளூர் வட்டச்  செயலாளர் எஸ்.கலை யரசன், சிஐடியு நிர்வாகி ஆர்.முரளி ஆகியோர் தலைமையில் இருளர் இன மக்கள் ஜேசிபி-யை முற்றுகையிட்டனர். ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் பின்னர் ஊத்துக் கோட்டை வட்டாட்சியரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கேட்டதற்கு எங்களுக்கு எதுவும் தெரியாது சார் என்று கூறியுள்ளார். அடுத்து  உடனடியாக வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ), சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து,  அதிகாரிகள் தெரியா மல் நடந்து விட்டது, இனி  இது போன்ற தவறுகள்  நடக்காது என உறுதியளித் தார். இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் விடு விக்கப்பட்டது. இந்த இடத்தை தனியாருக்கு விற்பனை செய்ய வரு வாய்த்துறை அதிகாரிகளே ஏற்பாடு செய்கிறார்கள் என  கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் வலியுறுத்தியுள்ள னர். மலைவாழ் சங்கம் வேண்டுகோள் வாழவந்தான் கோட்டை யில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கென ஒதுக்கப் பட்ட சுடுகாடு நிலத்தை சுற்றி லும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும், சுடுகாடு பாதை அமைத்து கொடுக்க வேண்டும், குடிநீர் பற்றாக் குறை போக்க உரிய நடவடிக்கை வேண்டும், இட  நெருக்கடியில் உள்ள 9 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.