துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நவீன வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி, மே 8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து முடிவுற்ற அரசு திட்டங்களையும், புதிய திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத் திட்ட உதவிகளையும் வழங்கியும் வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட் டத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயண மாக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வியாழனன்று திருச்சிக்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வந்தார். திருச்சியில் உள்ள விமான நிலை யத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமையில் திமுக எம்.பி.க்கள், எல்.எம்.எல்.ஏக்கள், மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்த னர். பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சென்றார். அங்கு துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரூ. 69 கோடி யில் 3.20 ஹெக்டேர் நிலத்தில் தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் 22 வகுப்பறைகள், வேதி யியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம் போன்ற நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களிடம் தமிழக அரசு மாண வர்களுக்கு செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரி கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிறகு கார் மூலம் திருச்சி சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். சுற்றுலா மாளிகையில், திருச்சி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களு டன் ஆலோசனை நடத்தினார். மேலும் திருச்சி மாவட்ட வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனை களையும் அறிவுரைகளையும் முதல மைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கி னார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு புத்தூர் பெரியார் சாலையில் நிறுவப்பட்டு உள்ள நடிகர் சிவாஜி சிலையை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், கலைஞர் அறிவா லயத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமான மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தினார்.