மதுரை:
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மொ.ஞானத்தம்பி, மாநிலத் துணைத்தலைவர், மாநிலச்செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, கொரோனா தொற்று காலத்தில் முன்கள வீரர்களான அரசு ஊழியர்கள்இறந்தால் ரூ.50 லட்சம், இறந்த அரசுஊழியர்களுடைய குடும்பத்தில் ஒரு வருக்கு அரசுப்பணி. கொரோனா பாதிக்கப்படும் அரசு ஊழியருக்கு ஊக்கத்தொகை யாக ரூ.2 லட்சம் வழங்கிட வேண்டும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர் ஆசிரியர் மீது போடப்பட்ட 17-பி குற்றகுறிப்பாணை, முதல் தகவலறிக்கை ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்; 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.கோரிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரி வித்தனர்.