தேனியில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தேனி, டிச.18- தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்கு வதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத் திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரி வாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வெள்ளி யன்று பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரி வாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து, நடவ டிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட குறைபாடுகளை தொடர்பான புகார் களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன” என்றார்.
ஆண்டிபட்டியில் பெண்ணிடம் நகை திருட்டு
தேனி, டிச.18- ஆண்டிபட்டி ஒன்றியம் கீ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வர் பால்ச்சாமி மனைவி பின்னியம்மாள் (68). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் நகைக்கடையில் பழைய நகையை மாற்றி புதிய நகையை வாங்கிவிட்டு, பூண்டு கடைக்கு சென்று விட்டு பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் அமர்ந்து, நகையை பார்த்த போது நகை காணவில்லை. புதிய நகையை வாங்கி வந்ததை நோட்ட மிட்டு மர்ம நபர் திருடி சென்றதாக பின்னியம்மாள், ஆண்டி பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.